செவ்வாய்க் கிரகத்தில் ஒளிரும் பொருளை ஆய்வு செய்யும் கியூரியோசிட்டி
- Sunday, 21 October 2012 18:08
செவ்வாய்க் கிரகத்தில் தற்போது தங்கியிருக்கும் கியூரியோசிட்டி விண் வண்டி அங்கு நுண்ணுயிர்கள் இருக்கிறதா என்பதை அறிவதே பிரதான நோக்கமாகக் கருதி செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சமீபத்தில் அதன் தரை மேற்பரப்பில் பிரகாசமாக ஒளிரும் பொருள் ஒன்றிருப்பதை அதன் கமெராக்கள் கண்டு பிடித்ததை அடுத்து அது மண்ணுக்குக் கீழும் காணப் படலாம் எனும் நோக்கத்தில் தற்போது அது மண்ணைத் தோண்டி ஆய்வு செய்து வருகின்றது.

நுண்ணுயிர் வாழ்க்கை இருக்கிறதா என்பதை அறிவதற்கு அது சேகரித்த மண் மாதிரிகளின் மத்தியில் தான் அந்த ஒளிரும் பொருள் காணப்பட்டது என்பதுடன் இதற்கு முன் சென்ற வாரம் பிளாஸ்டிக் பாகங்களும் கண்டு பிடிக்கப் பட்டிருந்தது. எனினும் இவையிரண்டும் கியூரியோசிட்டி விண் ஓடத்தில் இருந்து சிந்திய பதார்த்தங்கள் எனவும் கட்டுப் பாட்டு மையத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் கருதுகின்றனர்.
