Wednesday, May 22nd

Last update10:22:12 PM

500 டாலரில் உலகின் மிகச் சிறிய செய்மதி:தென்கொரியா பொறியியலாளர் சாதனை: புகைப்படங்கள்

தென் கொரியாவைச் சேர்ந்த 34 வயதான பொறியியலாளர் ஒருவர் உலகின் மிகச்
சிறிய நவீன செய்மதி ஒன்றை சொந்தமாகச் செய்துள்ளார்.

இதன் பெறுமதி இந்திய ரூபாயில் ரூ.27 500 ($500). இவர் சுமார் 6 வருடங்களுக்கும் மேலாக மலிவான எலெக்ட்ரோனிக் கடைகளில் இருந்து பல சாதனங்களைச் சேகரித்து
வந்திருந்தார்.

இவரது இந்த சிறிய செய்மதி இவ் வருட இறுதிக்குள் விண்ணில் செலுத்தப் படவுள்ளது. 'ஓப்பென்சட்' (Opensat) எனப் பெயரிடப்பட்டுள்ள இச் செய்மதி இவர் சேகரித்து வந்த இலத்திரனியல் சாதனங்களில் இருந்து செய்யப் பட்டது. உண்மையில் இந்த செய்மதியே உலகில் தனியொரு மனிதரின் முயற்சியால் செய்யப்பட்ட முதலாவது செய்மதியாகும்.

இதைத் தயாரித்த ஸொங் ஹோஜுன் (Song Hojun) என்பவர் இவ்வாறு உரிமை கூறியுள்ளார்.


வடிவியலில் ஓர் சதுரமுகி (Cubical) வடிவில் இருக்கும் இச்செய்மதி 1Kg நிறையையும்,10 cm3 கனவளவையும் உடையது. இச்செய்மதி அதன் பேட்டரியின் வேலை
செய்யும் திறன் பற்றியும், சுற்றுப்புற வெப்பநிலை குறித்தும், அதன் சூரியசக்திப் படல்கள் சுழலக்கூடிய வேகத்தையும் கணித்து தகவல் பரிமாற வல்லது.


இச்செய்மதி விண்வெளியில் இருந்து ரேடியோ அலைகள் மூலம் கட்டளைகளை உள் வாங்கி கணனி மொழி (codes) மூலம் பூமிக்குத் தகவல் பரிமாற்றம் செய்யக் கூடியது.

மேலும் சில பதிவுகள்:

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus