7. இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்னை பார்த்தும் பார்க்காதது போல் ஓடி ஓளிபவரை என்ன செய்வது?

அவரை இரண்டு முறை நான் அழைத்த போதும் கூட்டத்திற்குள் தன்னை மறைத்துக்கொள்வதில் குறியாக இருந்தார். தைரியமாக எப்போதும் தன்னை மட்டுமே முன்னிறுத்த விரும்பும் ஆவன்னாரூனா என்றழைக்கப்படும் ஆறுமுகத்தை பார்த்தே விட வேண்டுமென்று அவர் நின்று கொண்டிருந்த கூட்டத்தை நோக்கி முன்னேறிச் சென்றேன்.

Read more: டாலர் நகரம் - 7

நட்சத்திரப் பயணங்கள் தொடரின் பிரபஞ்சவியல் பகுதியில் நாம் பார்த்து வரும் 'பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்' எனும் அத்தியாயத்தின் இறுதிப் பாகமான இன்றைய கட்டுரையில் பிரபஞ்ச இயக்கத்தை விளக்கும் முழுமையான ஒரு தத்துவத்தை அல்லது ஒருங்கிணைந்த கொள்கையை (Unified Theory) உருவாக்குவது மனித இனத்துக்கு எவ்வளவு முக்கியமானது என்பது குறித்துப் பார்ப்போம்.

Read more: நட்சத்திரப் பயணங்கள் 30 (பிரபஞ்சவியல் 13, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 8)

6. ஆங்கிலப் பள்ளியும் அரை லூசு பெற்றோர்களும் நானும் சூழ்நிலைக் கைதிதான்!. மனைவியின் நிர்ப்பந்தம், மாமனாரின் அறிவுரை, சகோதரிகளின் எச்சரிக்கை இவை எல்லாம் போக அருகில் இருந்த அரசாங்க பள்ளியின் அலங்கோலம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு தான் குழந்தைகளை ஆங்கில வழி பள்ளிக்கூடத்தில் சேர்த்தேன்.

Read more: டாலர் நகரம் - 6

சென்ற தொடரில் ஆன்மிகவாதிகள் பெருவெடிப்பின் (Bigbang) போது கடவுள் உலகைப் படைத்தார் என்று தமது நம்பிக்கையை முன்வைப்பதற்கு இடமுண்டு என்று கூறியிருந்தோம்.

Read more: நட்சத்திரப் பயணங்கள் 28 (பிரபஞ்சவியல் 11, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 6)

Grand Unified Theory (GUT)


நட்சத்திரப் பயணங்கள் விண்வெளி அறிவியற் தொடரின் சென்ற பாகத்தில் பிரபஞ்சவியலிலும் (cosmology), பௌதிகவியலிலும் (Physics and Meta physics) கையாளப்படுகின்ற விஞ்ஞானமுறை தத்துவத்தின் (Scientific theory) இயல்பினையும் அது சிறந்த ஒன்றாக இருக்கத் தேவையான அம்சங்களைக் குறித்தும் விளக்கியிருந்தோம்.

Read more: நட்சத்திரப் பயணங்கள் 29 (பிரபஞ்சவியல் 12, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 7 )

5. வளர்ச்சியின் அடுத்த கட்டம் திருப்பூர் செய்தி தாள்களில் தினந்தோறும் “ஆட்கள் தேவை” என்ற விளம்பரங்கள் வந்து கொண்டேயிருக்கும். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமையில் அதிகமாகவே வரும்.

நான் பேச்சுலர் ரூமில் வாழ்ந்த ஆறு ஆண்டுகளில் ஏராளமான நிறுவன மாறுதல்களை கடந்து வந்துள்ளேன். ஒவ்வொரு நிறுவன மாறுதல்களுக்கும் பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் ஒன்று உண்டு. நல்ல உழைப்பு இருந்தால் மட்டும் போதும், வாழ்வில் முன்னேறிவிடலாம் என முதலிருந்தே நினைத்திருந்தேன். ஆனால் கடந்த வந்த பாதைகளில் உழைப்புக்கு அப்பாற்பட்டு, அன்றாட வாழ்வில் தேவைப்படும் பல சமயோஜித நடவடிக்கைகள் இல்லாத காரணமே என்னுடைய நிறுவன மாறுதல்களுக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதையே மற்றொரு பெயரில் சொல்வதானால் அன்றாட தொழில் வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய அரசியல் விளையாட்டுகள் எனக் குறிப்பிடலாம்.

Read more: டாலர் நகரம் - 5

4. தரகர்கள் எனும் தரமற்ற கூட்டம் என்னைப் போலவே முந்தைய நிறுவனத்திலிருந்த தப்பி வந்த ஜெரோம் தனியாக அறை எடுத்து தங்கியிருந்தார். அது ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட குடியிருப்பு வளாகம். இருபத்தி நான்கு மணி நேர தண்ணீர் வசதியுடன் அவினாசி சாலையில் எஸ்ஏபி திரையரங்கம் பின்புறம் இருந்தது.

Read more: டாலர் நகரம் - 4

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்