கட்டுரைகள்
Typography

விண்ணில் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலைய செய்மதியான ISS இற்குச் சென்று 6 மாதங்கள் ஆராய்ச்சி செய்யும் நோக்குடன் 3 விண்வெளி வீரர்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளனர். ரஷ்யாவின் Soyuz MS-07 என்ற விண்கலத்தின்  மூலம் கஜகஸ்தானின் பைக்கனூர் விண்வெளித் தளத்தில் இருந்து  ஞாயிறு மாலை இவர்கள் புறப்பட்டனர்.

நாசாவின் ஸ்காட் டிங்கில், ரஷ்யாவின் அண்டன் ஷிகபிலரோவ் ஜப்பானின் நோரிஷிகே கனாய் ஆகியவர்களே இவ்வாறு புறப்பட்டுச் சென்றவர்கள் ஆவர். நாளை செவ்வாய்க்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இந்த சோயுஸ் ஓடம் முற்றிலும் இணையவுள்ளது. இம்மூன்று வீரர்களிலும் ஸ்காட் டிங்கில் மற்றும் நோரிஷிகே கனாய் ஆகிய இருவரும் முதன்முறை விண்ணுக்குச் செல்கின்றனர்.

பெப்ரவரியில் விண்வெளியில் தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள ரஷ்ய வீரர் ஷிகபிலரோவ் 2 முறை விண்வெளிக்குச் சென்று வந்த அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Most Read