கட்டுரைகள்
Typography

 

நாசாவால் இதுவரை அவதானிக்கப் பட்ட விண்கற்களிலேயே மிகப் பெரியதும் 3200 Phaethon எனப் பெயரிடப் பட்டதுமான விண்கல் ஒன்று டிசம்பர் 16 ஆம் திகதி பூமிக்கு சற்று அருகில் கடக்கின்றது என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகே 10.3 மில்லியன் Km தொலைவில் இந்த விண்கல் கடக்கின்றதாம்.

பூமியில் வந்து மோதியதன் மூலம் டைனோசர்களின் இன அழிவுக்கு வழிவகுத்ததாகக் கருதப் படும் Chicxulub என்ற பாரிய விண்கல்லின் அரை மடங்கு அளவு கொண்டது இந்த 3200 Phaethon என்ற விண்கல் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இது பூமியில் மோதினால் மிகப் பெரிய தொடர் அதிர்வுகளையும் (Shock waves) கடலில் வீழ்ந்தால் சுனாமி அலைகளையும் ஏற்படுத்தக் கூடியதாம். இந்த விண்கல்லின் மிகவும் பரிச்சயமற்ற ஒழுக்கானது (Orbit) இதுவரை சூரியனுக்கு அருகே வந்ததாகப் பெயரிடப் பட்ட அனைத்து விண்கற்களையும் விட இது அருகே வந்து செல்ல வைத்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.

இதற்கு முன் 40 வருடங்களுக்கு முன்பு 1974 டிசம்பர் 16 ஆம் திகதி இந்த விண்கல் பூமிக்கு அருகே 5 மில்லியன் தொலைவில் கடந்து சென்றதாகக் கூறப்படுகின்றது. எனினும் இந்தமுறை இந்த விண்கல் கடக்கும் போது பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் 27 மடங்கு அதிக தூரத்தில் பூமியில் இருந்து தொலைவில் கடக்கின்றதாம். 2093 இல் அடுத்த முறை பூமிக்கு அருகே வரவுள்ள இந்த விண்கல் இம்முறை வரும் போது நாசாவால் முப்பரிமாண படங்களை எடுக்க முடிவதுடன் இந்து விண்கல் தொடர்பான கல்விக்கு மிக உபயோகமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

ஒரே நேரத்தில் விண்கல்லாகவும் வால்வெள்ளியாகவும் தொழிற்படும் இந்த விண்கல்லின் பெயர் கிரேக்கர்களின் சூரிய கடவுள் ஹெலியோஸ் இன் புத்திரனான ஃபெத்தோன் என்ற பெயரால் அழைக்கப் படுகின்றது.

Most Read