கட்டுரைகள்
Typography

இணையத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்படும் ஆடியோ வடிவமான MP3 தொடர்பான
காப்புரிமை நிறுத்தப்படுவைத்தால், முடிவுக்கு வருகிறது MP3

ஜெர்மனியைச் சேர்ந்த Fraunhofer IIS என்ற ஆய்வு நிறுவனம் தான், MP3 ஆடியோ
ஃபார்மெட்டை உருவாக்கி வளர்த்தெடுத்தது.90-களில் அறிமுகமான இந்த ஆடியோ
வடிவம், குறைந்த மெமரி திறன் கொண்டது என்பதால் இணைய உலகில் மிக விரைவில்
பிரபலம் ஆனது.

தற்போது MP3 ஃபார்மெட்டை விட அதிகத் தரம் கொண்ட ஆடியோ ஃபார்மெட்கள்
பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், MP3 ஃபார்மெட் தொடர்பான சில மென்பொருள்
காப்புரிமைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

மேலும் புதிதாக உற்பத்தி செய்யப்படும் கருவிகளுக்கு, MP3 தொடர்பான
காப்புரிமை வழங்கப்படாது. பயன்பாட்டில் இருக்கும் கருவிகளில் MP3
பயன்படுத்துவதில் எவ்விதப் பிரச்னையும் இருக்காது.

ஒரிஜினல் ஆடியோ ஃபைலானது சின்னச் சின்ன விவரங்களையும் சேமித்து
வைத்திருக்கும். உதாரணத்துக்கு, இயல்பான மனிதனால் 20 முதல் 20,000
ஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வலைகளை மட்டுமே உணர முடியும். இதை கேட்கும்
ஒலித்திறன் என்பார்கள்.

சிடி-க்களில் பதிவு செய்யப்பட்ட ஒரிஜினல் ஆடியோ ஃபைல் ஃபார்மெட்டில்,
இந்த அதிர்வலைகளைத் தாண்டியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டிருக்கும்.
அதாவது 44100 ஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வலைகள் கொண்ட விவரங்களும் டிஜிட்டல்
வடிவில் சேமிக்கப்பட்டிருக்கும்.

எனவே தான் அவை அதிக மெமரி கொண்டதாக இருந்தன. ஒரேயொரு ஆடியோ சிடியில் சில
பாடல்கள் மட்டுமே சேமிக்க முடிந்தன.மேலும், அதிக மெமரி அளவைக்
கொண்டிருந்ததால் எளிதாக அவற்றைப் பரிமாற முடியாமல் இருந்தது. இதை
மாற்றியமைத்து, குறைந்த அளவு கொண்ட ஆடியோ ஃபைலாக மாற்றியதால், MP3 ஆடியோ
வடிவம் இணைய உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது.

MP3 ஃபார்மெட்டானது, தேவையற்ற விவரங்களை நீக்கியது. மனிதனின் கேட்கும்
ஒலித்திறனின் விவரங்களை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற தேவையற்ற விவரங்களை
நீக்கிவிடும்.

எனவே, ஆடியோ ஃபைலானது கம்ப்ரெஸ் செய்யப்பட்டு, அதன் மெமரி மிகக்
குறைவானதாக சேமிக்கப்படும். MP3 ஃபார்மெட்டைப் பொறுத்தவரை, பல நூறு மெகா
பைட்கள் மெமரி திறன் கொண்ட ஒரிஜினல் பாடல் கூட, சில மெகா பைட்களில்
மாற்றப்பட்டு சேமிக்கப்படும். உலகம் முழுவதும் MP3 இசை வடிவம் மிகவும்
பிரபலமாக இது தான் காரணம்.

இணைய வளர்ச்சியில் MP3 பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தினாலும், ஒரிஜினல்
ஆடியோவை விட கொஞ்சம் தரம் குறைவானதாகவே கருதப்படுகிறது. பிட் ரேட்களைப்
பொறுத்து MP3 ஆடியோ வடிவத்தின் தரம் தீர்மானிக்கப்படுகிறது.

MP3 அறிமுகமானபோது, மியூசிக் ஆல்பங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள்
இதனை கடுமையாக எதிர்த்தன. காப்புரிமையை மீறி கிட்டத்தட்ட அனைத்துப்
பாடல்களும் இணையத்தில் இலவசமாகப் புழங்கின. விலை கொடுத்து மியூசிக்
ஆல்பங்களை வாங்கிய ரசிகர்கள், இலவசமாக இணையத்தில் இருந்து டவுன்லோடு
செய்ததை, ஆடியோ கேசட் விற்கும் நிறுவனங்கள் விரும்பவில்லை.

2001-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம், MP3 பாடல்களைக் கேட்கும் ஐ-பாட் கருவியை
அறிமுகப்படுத்தியது. அப்போதும் ஆடியோ கேசட் விற்பனை செய்யும் நிறுவனங்கள்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அதன்பின் நடந்ததெல்லாம் வரலாறு.
ஐபோன் விற்பனை மூலமாக ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம்
நிலைத்து நிற்க.

ஐ-பாட் தான் விற்பனைதான் அஸ்திவாரம் அமைத்துத் தந்தது. 2003-ம் ஆண்டிலேயே
MP3 வடிவத்தை விட கூடுதல் பலன்கள் கொண்ட ஏ.ஏ.சி (AAC) ஆடியோ வடிவத்தை
ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்த ஆரம்பித்தது தனிக்கதை. அது மட்டுமில்லாமல்,
தற்போது ஐ-டியூன்ஸ் வழியாக இணையத்தில் பாடல்களை லீகலாக டவுன்லோடு செய்ய
முடியும்.

யூ டியூப் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங், தொலைக்காட்சி மற்றும் வானொலி
சேவைகளில் MP3 வடிவத்தை விடவும் தரம் வாய்ந்த ஆடியோ வடிவங்கள்
பயன்படுத்தப்படுகின்றன.

அட்வான்ஸ்டு ஆடியோ கோடிங் (AAC) எனப்படும் ஆடியோ வடிவமானது, அதிக
தரத்துடன் குறைந்த மெமரி கொண்டதாக உள்ளது. எனவே MP3 வடிவத்தை விட இவை
அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

MP3 ஆடியோ வடிவத்தை உருவாக்கிய Fraunhofer IIS ஆய்வு நிறுவனம் தான், இந்த
ஆடியோ வடிவமைப்பையும் உருவாக்கி காப்புரிமை வைத்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS