கட்டுரைகள்
Typography

சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த கஸ்ஸினி விண்கலம் தனது பணியின் இறுதிக் கட்டத்தில் சனியின் வலையங்களுக்கும் கிரகத்துக்கும் இடையே டைவிங் செய்தது. இதன்போது கஸ்ஸினி விண்கலத்தால் எடுக்கப் பட்ட சனிக்கிரகத்தின் ரம்மியமான புகைப் படங்களை நாசா இணையத் தளங்களுக்கு வெளியிட்டுள்ளது.

சனிக்கிரகத்தின் வளையங்கள் மற்றும் அவற்றிலுள்ள கோடுகள் குறித்து வெளியாகி வரும் இப்புகைப்படங்கள் மூலம் அங்கும் அதன் துணைக் கோள்களிலும் உயிர் வாழ்க்கைக்கு உகந்த உறுதியான சூழலின் ஆதாரம் கிடைக்கின்றதா என எதிர் பார்க்கப் பட்டு வருகின்றது. மே 3 ஆம் திகதி முதல் கிடைத்து வரும் இப்புகைப் படங்களில் சனியின் முக்கிய துணைக் கோள்களான டைட்டன் மற்றும் ரேயா ஆகியவையும் அடங்குகின்றன.

சனியின் வளையங்களுக்கு இடையில் கஸ்ஸினி விண்கலம் 20 தடவைகள் பாயவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உயிர் வாழ்க்கைக்கு மிக முக்கிய மூலகமான ஹைட்ரஜன் சனியின் துணைக்கோள் ஒன்றில் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. நாளை 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கஸ்ஸினி விண்கலம் சனியின் வடக்கு முனையில் இருந்து தெற்கு முனைக்குப் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி, தகவல் புகைப்படங்கள் : Mail Online

 

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்