கட்டுரைகள்
Typography

செல்போன் மற்றும் டேப்லெட்களில் விளையாடி பொழுதை கழிக்கு குழந்தைகள் பேசி
பழகுவதில் காலதாமதம் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான் சிஸ் நகரில் குழந்தைகள் அகாடமிக் சங்கங்களின்
கூட்டம் நடந்தது. அதில் நிபுணர்கள் புதிய ஆய்வு அறிக்கையை தாக்கல்
செய்தனர்.அதில் நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் செல்போன் மற்றும்
டேப்லெட்களில் விளையாடி பொழுதை கழிக்கு குழந்தைகள் பேசி பழகுவதில்
காலதாமதம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

கனடாவில் டொரன் டோவை சேர்ந்த 6 மாதம் முதல் 2 வயது வரையிலான 894
குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 3 ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சி
நடத்தப்பட்டது. அதில் தினசரி 30 நிமிடத்துக்கு குறையாமல் செல் போன்
மற்றும் டேப்லெட் பயன்படுத்தும் குழந்தைகள் பேசுவதில் காலதாமதமாவது 49
சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன்களிலேயே கவனம் முழுமையாக செயல்படுவதால் பேசும் ஆவல் குறைகிறது.
எனவே குழந்தைகள் அவற்றை அளவாக பயன்படுத்தும் வகையில் பெற்றோர்
முறைப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்