கட்டுரைகள்
Typography

எந்த தொழில் செய்தாலும், நமக்கென்று ஒரு தனித்துவம் இருந்தால் நிச்சயம்
ஜெயிக்கலாம்.அதோடு, தொழிலுக்கான அர்ப்பணிப்பு உணர்வு என்பது நாம்
செய்யும் பணியோடு கலந்தும் இருக்க வேண்டும். அவ்வளவுதான், உங்களின்
வெற்றி பாதை நிர்ணயிக்கப்பட்டு நீங்கள் உச்சத்தை அடைவது நிச்சயம்.

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று இதைத்தான்.பெரியவர்கள் பழமொழியாக
சொல்லி இருக்கிறார்கள் போலும்.இதற்கெல்லாம் உதாரணமாக பல் மருத்துவர்
டாக்டர் திருமதி வித்யா சபரியை அடையாளம் காட்டுவதற்காகத்தான் இந்த
முன்னுரை.அப்படி என்ன, வித்யா சபரியிடம் ஸ்பெஷல்?

அவரே கூறுகிறார்,"பல் மருத்துவம் ;படித்துவிட்டு, பெரிய மருத்துவ
மனையில், குளிர்சாதன வசதி கொண்ட அறையில் உட்கார்ந்து, மருத்துவம்
பார்த்துவிட்டு மாத சம்பளம் பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.இந்த தொழிலை
மனித சமுதாயத்துக்கு ஒரு கடமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற
வேண்டும் என்று ஏற்றுக்கொண்டேன்.

அப்படி கடமையாக அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ய வேண்டும் என்றால், எதெதுக்கு
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வகைப்படுத்தினேன்.இதில், முன்னதாக
நின்றது, வயதானவர்களுக்கு ஏற்படும் பல் பிரச்னைகள்தான்.இவர்கள் பல்லுக்கு
ஏதாவது பிரச்சனை என்றால், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இன்னபிற
நோய்களில் அவர்கள் ஏற்கனவே தவித்து வரும் நிலையில், பூச்சி பற்கள்,
ஈறுகள் பலவீனமாக இருத்தல் என்று எத்தனையோ பல் தொடர்பான உபாதைகள் வேறு
இவர்களை பாடாய்ப் படுத்தி வரும்.எனவே, வயது முதிந்தவர்களுக்கு பல்
மருத்துவம் பார்ப்பதை நான் ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு செயல்பட்டேன்.

பொதுவாகவே சிறியவர்கள் பெரியவர்கள் என்று பாகுபாடெல்லாம் பல்
மருத்துவர்கள் பார்ப்பதில்லை. பூச்சிப் பல்லா உடனே அந்த பல்லை
பிடுங்கிவிட வேண்டும் என்கிற நிலைதான் பெரும்பாலான நகரங்களில் இன்றும்
பல் மருத்துவர்கள் கடைப்பிடிப்பது.இது எவ்வளவு பெரிய பிழை தெரியுமா?
சிறியவர்கள் என்றால், முக வசீகரம் குறைந்து போய், சிரிக்கும்போது பல்
இல்லாதது தெரியும்.இதே பெரியவர்கள் எனும்போது ஆசைப்பட்டதை சாப்பிட
முடியாமலும் போகும்.

இதையெல்லாம் யோசித்து, ஒரு பல் பூச்சி பல் எனும்போது, அதை சுத்தம்
செய்து, ஆன்டிபயாடிக் மாத்திரைகள் சாப்பிட செய்து, பக்கத்து பல்லின்
சப்போர்ட்டுடன் பூச்சி பல்லை கவர் செய்ய செராமிக் கேப் போட்டு
விடுவேன்.இந்த செராமிக் கேப் போடுவதில் சரியாக பொருந்த வேண்டிய அவசியம்
உள்ளது என்பதால், இதிலும் மிக கவனமாக செயல்படுகிறேன்." என்று கூறுகிறார்
வித்யா.

செராமிக் கேப், க்ளீனிங் என்று அதிக செல்வாக்குமோ என்று கேட்டால்,

"நான்தான் முன்பே சொல்லி இருக்கிறேன். எனக்கு பணம் மட்டுமே குறிக்கோள்
அல்ல.அதிகம் பணம் வாங்கி ஒரு பேஷண்ட் ரெண்டு பேஷண்ட் என்று
பார்த்துவிட்டு, உட்கார்ந்து கிடப்பதை விட , எனது தொழிலை அதிக
பேஷண்ட்களுக்கு செய்வதன் மூலம், நானும் புதுப்புது கிரியேட்டிவான
விஷயங்களை புகுத்தி, அவர்களின் நிறைவை கண்கூடாகப் பார்த்து மகிழ்வதையே
விரும்புகிறேன்.

எப்போதுமே எனது மருத்துவத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கே முதலிடம். ஒரு
செராமிக் பல் கேப் போடுவதற்கு வெறும் ஆயிரத்து 500 ரூபாய்தான் வாங்கிக்
கொண்டு இருந்தேன். இப்போது அனைவருக்குமே ஆயிரத்து 500 ரூபாய்தான்
வாங்குகிறேன்.

BLOG COMMENTS POWERED BY DISQUS