கட்டுரைகள்
Typography

எமது மூளை இந்த உலகில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் ஏற்றுக் கொள்ளும் அசாத்தியத் திறமையை எவ்வாறு வளர்த்துக் கொள்கின்றது என்பதற்கு உதாரணமாக ஒரு விடயத்தை விளக்கியுள்ளனர் சிங்கப்பூர் பாரிஸ் மற்றும் இலண்டன் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.

அது என்னவெனில் நாம் கண்ணை சட்டென இமைத்துத் திறக்கும் இடைவெளியில் உலகம் ஏன் இருட்டாவது இல்லை என்பதே ஆகும். பொதுவாக மனிதன் உட்பட பாலூட்டி உயிரினங்களில் கண்ணை இமைக்கும் செயற்பாடானது கண்ணை ஈரப்பதனாக வைத்திருக்க மட்டுமன்றி பார்வைத் திறனைத் திடமாக வைத்திருப்பதற்கும் ஆகும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் நாம் இமைக்கும் செக்கன் இடைவெளியில் எமது கண் மணிகள் அதே இடத்தில் நிரந்தரமாக திருத்தம் செய்யப் படுவதில்லை. பதிலாக குறித்த பார்வை மூளையில் ஏற்படுத்தும் பதிவில் நிலைநாட்டப் பட்டு உடனே வழமைக்குத் திரும்புகின்றது.

இந்த அவதானமானது எமது மூளை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சூழலில் ஏற்படும் மாற்றங்களை அனுமதித்து வருகின்றது என்ற முக்கியமான கண்டு பிடிப்புக்கு இட்டு செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் மூளை ஒவ்வொரு முறை இமைக்கும் போதும் முன்னதாக பார்வையால் ஏற்பட்ட பதிவை கண் மணிக்குத் தருவதன் மூலம் அதற்கு சற்று ஓய்வு பெறவும் மாற்றங்களை உடனடியாக உணரும் தன்மையையும் தருவதாகவும் விளக்கம் தரப்படுகின்றது. மூளை இவ்வாறு செயற்படாவிட்டால் ஒரு கமெராவில் ஓடும் படம் போல் எமது பார்வைத் திறன் நிழலில் தங்கியும் ஒளிக் கசிவாகவும் தென்படும் என்றும் கூறப்படுகின்றது.

ஒரு கமெராவில் ஓடும் படம் வெறும் திரையில் அல்லது அதன் புரோகிராமில் தங்கியிருக்கும். ஆனால் மனிதனின் கண்களில் ஓடும் படம் எமது மனதில் ஒப்பீடுகளுடன் இணைந்து மூளையில் தனித்துவமான பதிவுகளை ஏற்படுத்துவது என்பது குறிப்பிடத்தக்கது. மூளையின் இச்செயற்பாடும் அதனால் கண்மணிகளில் ஏற்படுத்தப் படும் அசைவும் 12 மனிதர்களிடம் அகச்சிவப்பு (Infrared) கமெராவைப் பாவித்து ஆராயப் பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS