கட்டுரைகள்
Typography

இன்று டிசம்பர் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். சர்வதேச மனித உரிமைகள் எப்போது, யாரால், எக்காரணத்தால் வகுக்கப்பட்டது என்பதனை குறித்த யூடியூப் வீடியோ ஆங்கிலத்தில் மிக அழகாக விளக்குகிறது. 

இன்றைய நாளில் மனித உரிமைகளுக்காக போராடி அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கும் பல்லாயிரக்கானோரில் ஒரு சிலரையேனும் காப்பாற்ற நீங்கள் சற்று கூடுதல் கவனம் எடுப்பது அவசியமாகும். உதாரணமாக சர்வதேச மன்னிப்பு சபை இந்நபர்களை காப்பாற்றுமாறு உங்களிடம் கோரிக்கை விடுக்கிறது.

Shawkan : எகிப்திய புகைப்பட ஊடகவியலாளரான இவர், காவல்துறையினரின் படுகொலைச் சம்பவம் ஒன்றை புகைப்படம் எடுத்ததை அடுத்து கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகி வருகிறார்.

Edward Snowden : அமெரிக்காவின் புலனாய்வு பிரிவினரால் உலகம் முழுவதும் எவ்வாறு மற்றவர்களின் தொடர்பாடல்கள் இரகசியமாக கண்காணிக்கப்பட்டு, தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது என்பதனை வெளியுலகுக்கு கொண்டு வந்ததற்காக துரோகி எனும் பட்டம் கட்டப்பட்டு அகதியாக ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். 

Annie Alfred : மலாவியில் அல்பினோஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரே காரணத்திற்காக, கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியியுள்ளார். 

Eren Keskin : துருக்கி அரசை விமர்சித்ததால் நீதிமன்ற வழக்கில் இம்சைப்படுத்தப்படுகிறார்.

கனேடிய பழங்குடியினர் : மிகப்பெரும் பாலம் ஒன்றின் கட்டுமாணப்பணிகளுக்காக தாம் வாழும் பிரதேசங்களில் இருந்து அகற்றப்படும் ஆபத்தில் உள்ளனர். 

 இவர்களுக்கு ஆதரவாக, இவர்களை காப்பாற்றுவதற்கு நீங்கள் முனைந்தால் அந்நாட்டு அரசாங்கங்களுக்கு நீங்களும் கடிதம் எழுதலாம். இந்த வழியில் : https://www.amnesty.ch/fr/participer/ecrire-des-lettres/marathon 

BLOG COMMENTS POWERED BY DISQUS