கட்டுரைகள்
Typography

20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானியும் பௌதிகவியலாளருமான அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் ஒளியின் வேகம் குறித்த பார்வையே நவீன யுகத்தில் பிரபஞ்சத்தின் கூறுகள் பற்றிக் கற்பதற்கான அடிப்படைகளுக்கும் நவீன பௌதிகவியலுக்கும் வழி கோலி வருகின்றது.

அதாவது வெற்றிடத்தில் ஒளியின் வேகம் ஒரு மாறிலி என ஐன்ஸ்டீன் நிரூபித்தார். ஆனால் நவீன வானவியலில் கையாளப் படும் inflation theory அதாவது விரிவாக்கக் கொள்கைகளின் மாதிரியில் வெளிப்படும் எல்லை பிரச்சினை (Horizon problem) என்ற ஒரு புதிரில் ஐன்ஸ்டீனின் நிரூபணம் கேள்விக் குறியாகுவதாகக் கூறப்படுகின்றது.

 

அதாவது பிரபஞ்சம் தோன்றிய புதிதில் ஒளியானது இப்போது பயணிக்கும் வேகத்தை விட மிக அதிக வேகத்தில் பயணித்திருக்கலாம் எனவும் பின்னர் படிப்படியாக வீழ்ச்சியடைந்து நிகழ்காலத்தில் குறித்த ஐன்ஸ்டீன் கணிப்பிட்ட மாறிலி வேகத்தை அடைந்துள்ளது எனவும் வானவியலாளர்கள் புதிய கருத்தைத் தெரிவித்துள்ளனர். இந்தக் கொள்கையை அவதான அடிப்படையில் நிரூபிக்கலாம் எனவும் வானவியலாளர்கள் கூறியுள்ளனர். அவ்வாறு நிரூபிக்கப் படும் பட்சத்தில் அது பிரபஞ்சம் பற்றிய எமது இன்றைய பார்வையைத் தலைகீழாகப் புரட்டிப் போட வல்லது எனப்படுகின்றது.

 

ஏனெனில் ஐன்ஸ்டீன் தனது சிறப்பு சார்புக் கொள்கையை வெளியிட்டு வெற்றிடத்தில் ஒளியின் வேகத்துக்கு நிகராக இப்பிரபஞ்சத்திலே எதுவுமே பயணிப்பதில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்தக் கொள்கையை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக இன்று வரை உடைக்க முடியவில்லை. ஆனால் inflation theory இன் மாதிரி கட்டி எழுப்பப் படும் பட்சத்தில் பிரபஞ்சம் குறித்த எமது இன்றைய பார்வை முழுமையாக மாற்றப் படக் கூடியது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

தகவல் : Mail Online

 

 

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS