கட்டுரைகள்
Typography

ஆக்டோபர் 3 ஆம் திகதி பூமிக்கு மிக அருகே கடக்கும் 2007 FT3 என்ற விண்கல் பூமியுடன் மோதினால் சுமார் 2700 மெகாடன் டி என் டி இற்கு இணையான சக்தியை வெளிப்படுத்தும் என சமீபத்தில் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் இந்த விண்கல் பூமியுடன் மோத மில்லியனில் ஒரு மடங்கு வாய்ப்பு தான் உள்ளது என்கின்றது நாசா.

இந்த விண்கல் பூமியுடன் மோதினால் வெளிப்படுத்தக் கூடிய சக்தியானது பூமியில் இதுவரை மனிதனால் வெடிக்க வைக்கப் பட்ட அணுகுண்டுகளில் அதிக சக்தி வாய்ந்ததான Tsar bomba இனை விட 50 மடங்கு வலிமை வாய்ந்தது ஆகும். மேலும் மனித இன வரலாற்றில் பதியப் பட்ட விண்கல் தாக்குதல்களில் மிகப் பெரியதான துங்குஸ்கா நிகழ்வு என அழைக்கப் பட்டும் விண்கல் தாக்குதலை விட 2007 FT3 விண்கல்லானது 200 மடங்கு வலிமையானதும் ஆகும். இந்த துங்குஸ்கா நிகழ்வின் போது ரஷ்யாவின் சைபீரிய வனப் பகுதியில் ஒரு மிகப் பெரிய வனம் அப்படியே அழிந்ததாக வரலாறு கூறுகின்றது.

ஆனாலும் 2007 FT3 பூமியில் மிக மிக மிக அரிதாக மோதினாலும் கூட அது மிகப் பெரிய ஒரு இயற்கை அனர்த்தமாகவே இருக்கும் என்றும் மனித இனத்தினை அது பூண்டோடு அழித்து விடாது என்றும் கூறப்படுகின்றது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியை ஆட்சி செய்து வந்த டைனோசர்கள் உண்பதற்கு உணவு கிடைக்காது அவற்றைப் பூண்டோடு அழித்த மிகப் பெரிய விண்கல் மோதுகை Chicxulub impact எனப்படுகின்றது. இந்த ஒப்பிட முடியாத மிகப் பெரிய விண்கல்லை விட, 2007 FT3 என்ற இப்போது பூமிக்குத் தொலைவில் கடந்து செல்லவுள்ள விண்கல் மில்லியன் மடங்கு வலிமை குறைந்தது என்பதும் ஆறுதலான செய்தி தான்!

ஆனாலும் பூமியின் நிலப் பரப்பில் விழுந்தால் மிகப் பாரிய அதிர்வலைகளையும் (Shock Waves), சமுத்திரத்தில் விழுந்தால் மிகப் பெரிய உயரத்துக்கு சுனாமி அலைகளையும் ஏற்படுத்தக் கூடிய இந்த விண்கல்லின் இயக்கத்தை நாசா துல்லியமாக நோட்டமிட்டு வருகின்றது. மேலும் இந்த விண்கல் பற்றி தேவையில்லாத அச்சத்தைப் பொது மக்கள் வளர்த்துக் கொள்ளத் தேவையில்லை என்றும் நாசா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தகவல் : நாசா

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்