கட்டுரைகள்
Typography

பூமியின் காலநிலைகளிலும் மனிதத் தேவைகளிலும் தீவிர தாக்கம் செலுத்தக் கூடிய WMM என்றழைக்கப் படும் பூமியின் வடக்கு மின்காந்தத் துருவம் எதிர்பாராத விதமாக ரஷ்ய சைபீரிய சமவெளியை நோக்கி மிக வேகமாக நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

கடந்த வருடம் செப்டம்பரில் இந்த மின்காந்தத் துருவம் எங்கிருக்க வேண்டுமோ அங்கிருக்கவில்லை எனக் கூறும் இவர்கள் தற்போது இதன் நகர்வைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த பூமியின் மின்காந்தப் புலமானது அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம், பிரிட்டனின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பொறிமுறைகளாலும் தொடர்ந்து கண்காணிக்கப் படுகின்றது. அதாவது வடக்கு மற்றும் தெற்கு மின்காந்தப் புலத் துருவங்களின் அமைவிடமானது அந்தளவு முக்கியத்துவம் பெருகின்றது. 1831 இல் முதல் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வடக்கு மின்காந்தத் துருவம் 70 வருடங்களின் பின் 30 மைல் நகர்ந்திருந்தது. அடுத்த நூற்றாண்டுக்குள் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 6 மைல் என்ற வீதத்தில் நகர்ந்து வரும் இது சமீப தசாப்தங்களில் வருடத்துக்கு 25 மைல் என்ற கணக்கில் வேகம் எடுத்துள்ளது.

அதாவது இது தற்போது கனேடிய ஆர்க்டிக் பகுதியில் இருந்து சைபீரியா நோக்கி விரைவாக நகர்கின்றது. இந்த WMM என்ற அழைக்கப் படும் பூமியின் வட துருவத்திலுள்ள மின்காந்தப் புலமானது இராணுவம், நாசா, வனவியல், மேப்பிங், நேவிகேஷன், ஏர் டிராஃபிக், ஸ்மார்ட் ஃபோன்களுக்கான ஜிபிஎஸ், திசைகாட்டி அப்ளிகேஷன்கள் எனப் பலவிதமான மனிதத் தேவைகளுக்குப் பயன்படும் ஒரு விடயமாகும்.

இதேவேளை வட தென் துருவங்களுக்குப் பின்பு பூமியில் மிக அதிக பனி உறைந்துள்ள பிரதேசமான இமய மலைத் தொடர் மற்றும் இந்து குஷ் ஆகிய மலைத் தொடர்களில் புவி வெப்ப மயமாதல் காரணமாக பனி அதிகளவில் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வளி மாசடைதலும் இதைத் துரிதமடையச் செய்து வருகின்றது. இதனால் இந்த மலைப் பகுதிகளில் உள்ள சுமார் 3500 Km பரப்பளவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, சீனா, மியான்மார், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் நினைத்துப் பார்க்க முடியாத இயற்கை அனர்த்தத்துக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது எனவும் புவியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்