கட்டுரைகள்
Typography

சமீபத்தில் எகிப்தில் 2000 வருடங்களுக்கும் அதிக பழமையான, கி.மு 305 ஆம் ஆண்டுக்கும் கி.மு 330 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த சுமார் 50 பதப் படுத்தப் பட்ட உடல்கள் அதாவது மம்மிகள் தொல் பொருளியலாளர்களால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்குத் தெற்கே உள்ள மின்யா என்ற நகரில் 30 அடி ஆழத்தில் இவை கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

இந்த மம்மிக்களில் 12 , குழந்தைகளின் உடல்கள் எனவும் கண்டறியப் பட்டுள்ளது. மிக மர்மமான ரசாயனத்தால் பதப் படுத்தப் பட்ட இந்த உடல்கள் துணிகளால் சுற்றப் பட்டு, கல் மற்றும் மரங்களால் ஆன சவப் பெட்டிகளில் வைக்கப் பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. தற்போது இந்த மம்மிக்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. 2019 ஆமாண்டு தொல் பொருளியலாளர்களால் இந்தளவு மம்மிக்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்