கட்டுரைகள்
Typography

அண்மையில் சீனா நிலவின் மறுபுறமான பூமிக்குத் தென்படாத அதன் முதுகுப் பகுதியில் சென்று தரையிறங்குமாறு Change-4 என்ற செயற்கைக் கோளை வெற்றிகரமாக அனுப்பியிருந்தது.

20 நாட்கள் பயணித்து ஜனவரி 3 ஆம் திகதி நிலவின் மறுபுறத்தில் இறங்கிய இந்த விண்கலம் உடனடியாக அதில் கொண்டு செல்லப் பட்ட பருத்தி விதையை உரிய முறைப்படி நிலவில் விதைத்துள்ளது.

இதன் மூலம் நிலவின் பின்பக்கத்துக்கு முதலில் விண்கலத்தை இறக்கிய நாடாகவும் நிலவில் முதன் முறை ஒரு விதையை விதைத்த நாடாகவும் சீனா பெயர் பெற்றுள்ளது. இது குறித்து சீனாவின் Xie Gengxin of Chongqing University என்ற பல்கலைக் கழகம் தகவல் அளிக்கையில்
சாங்கே-4 கொண்டு சென்ற மினி விண்கலமான யாடு தனக்குள் பருத்தி விதை மாத்திர மல்லாது ரேப்சீட், கிழங்கு, அரபிடோப்சிஸ் மற்றும் Fruit fly இன் eggs, சில yeast என்பவற்றையும் அவை முளைக்கத் தேவையான தண்ணீர், மண், காற்று, இரு சிறிய கமெராக்கள் மற்றும் வெப்பக் கட்டுப்பாட்டுக் கருவி என்பவற்றையும் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

நிலவில் ஈர்ப்பு விசை பூமியை விட 1/6 மடங்கு தான் என்பதால் இந்த குறைந்த ஈர்ப்பு விசையில் அங்கு வெற்றிகரமாகத் தாவரங்களை வளர்க்க முடியுமெனின் வருங்காலத்தில் மனிதன் அங்கு பாசறைகள் அமைக்கும் திட்டத்துக்கு இது உதவி புரியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது நிலவில் விதைக்கப் பட்ட பருத்தி விதைகள் துளிர் விட்டு முளைக்கத் தொடங்கியுள்ளதை சந்தோசத்துடன் சீன வானியலாளர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்