கட்டுரைகள்
Typography

அண்மையில் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வெல்ஸ், கனடா போன்ற இடங்களில் உள்ள நவீன ரேடியோ அலைத் தொலைக் காட்டிகளுக்கு சுமார் 150 கோடி ஒளியாண்டுத் தொலைவில் இருந்து கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணித்த மர்ம வானொலி அலைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த மர்ம சமிக்ஞைகள் பூமியிலுள்ள மனிதனைப் போன்ற அறிவார்ந்த ஏதேனும் உயிரினத்தால் அனுப்பப் பட்டதா என்பது குறித்து தற்போது ஆய்வு நடந்து வருகின்றது.

இதுவரை குறிப்பிடத்தக்க 60 ரேடியோ அலைகளை இத்தொலைக் காட்டிகளை வந்தடைந்திருந்தாலும் ஒரே வகையான ரேடியோ அலை 2 ஆவது முறையாகவும் வருவது இதுவே முதன்முறை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதிவேக ரேடியோ தகன அலைகள் எனப் பொருள் படும் விதத்தில் Fast Radio Bursts (FRBs) என அழைக்கப் படும் இந்த அதிதிறன் வானொலி அலைகள் பற்றிய கல்வியானது எமது பிரபஞ்சம் எப்படிப் பரிணாமம் அடைந்து வருகின்றது என்பதை அறிய உதவும் முக்கிய வழிமுறையாகும். இந்த அலைகளானது தாம் சந்திக்கும் அனைத்து எலெக்ட்ரான்கள் மூலமாகவும் விரிவாகப் பரவ விடப் படுபவை என்றும் இதனால் ஒவ்வொரு அண்டங்களுக்கும் (Galaxies) இடையேயான அடர்த்தியை அறிந்து கொள்ள முடியும் என்றும் கூறப்படுகின்றது.

1.5 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருந்து கனடாவிலுள்ள CHIME ரேடியோ தொலைக் காட்டிக்குக் கிடைக்கப் பெற்ற சிக்னலின் மிகத் திருத்தமான தன்மை மற்றும் அதன் இருப்பிடம் தொடர்பில் உரிய தகவல் இதுவரை இல்லை. பொதுவாக விண்வெளியில் மிக வலிமையான மின்காந்த பாய்மத்தை உருவாக்கும் விதத்தில் இரு நியூட்ரோன் நட்சத்திரங்கள் இணைந்து மிக வேகமாகச் சுற்றிக் கொண்டு இணையும் போது ஏற்படும் ரேடியோ அலைகளைப் போன்றே வேறு விதத்திலும் இவை ஏற்படுவதற்கு பல விளக்கங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS