கட்டுரைகள்
Typography

கடந்த ஏப்பிரல் மாதம் விண்ணில் பூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிப்பதற்காக நாசாவால் விண்ணுக்குச் செலுத்தப் பட்ட TESS என்ற செயற்கைக் கோள் ஜனவரி 7 ஆம் திகதி நமது சூரிய மண்டலத்துக்கு மிக அண்மையில் சூரியனின் நிறையில் 0.68% வீத நிறையைக் கொண்ட HD 21749 என்ற சிவப்புக் குள்ளன் நட்சத்திரத்தை கண்டு பிடித்தது.

இந்த நட்சத்திரம் பூமியின் தென்னரைக் கோளத்தில் உள்ள நீர்ப்பாம்பு (Hydrus) மற்றும் தங்கமீன் (Dorado) ஆகிய நட்சத்திரத் தொகுதிகளை இணைக்கும் Reticulum என்ற வலைப் பின்னலில் காணப்படுகின்றது. மேலும் இந்த HD 21749 என்ற நட்சத்திரம் பூமியில் இருந்து 53 ஒளியாண்டுகள் தூரத்தில் தான் உள்ளது. அதாவது இது பூமியில் இருந்து மிக அண்மையில் 100 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள ப்ராக்ஸிமா செண்டூரி என்ற நட்சத்திரத்தை விட அண்மையில் உள்ளது.

இந்த நட்சத்திரத்தைச் சுற்றி பூமிக்கு ஒப்பான இரு கிரகங்கள் (Exoplanets) காணப்படுகின்றன. HD 21749b என்று பெயரிடப் பட்ட கிரகம் நெப்டியூனின் அளவுடைய சூடான பாறைகள் கொண்ட பூமியை விட 3 மடங்கு பெரிய கிரகமாகும். HD 21749c என்று பெயரிடப் பட்ட 2 ஆவது கிரகம் பூமிக்கு ஒப்பான சிறிய கிரகமாகும். இக்கிரகங்கள் குறித்து மசாசூசெட்ஸ் தொழிநுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர் டயானா டிரகோமர் கருத்துத் தெரிவிக்கையில் அதிகளவு பாறைகள் மற்றும் நைட்ரஜன் வாயுவுடன் காணப் படும் HD 21749b கிரகம் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்பதால் உயிரினங்கள் வாழத் தகுதியான கிரகமாகும் என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்