கட்டுரைகள்
Typography

எடின்பர்க் மருத்துவ மனை விஞ்ஞானிகளும் நியூயோர்க்கைச் சேர்ந்த Center of Human reproduction என்ற அமைப்பின் விஞ்ஞானிகளும் சேர்ந்து மனித முட்டையை ஆய்வு கூடத்தில் வெற்றிகரமாக வளர்த்து சாதனை படைத்துள்ளனர்.

இதன் மூலம் முழுமையாக ஆய்வு கூடத்தில் மனிதனின் குளோனை உருவாக்க முடியா விட்டாலும் சிதைந்த உடல் உறுப்புக்களை அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மீளமைத்தல் மற்றும் பெண்களின் கருத்தறித்தல் குறைபாடுகளைப் போக்குதல் மற்றும் செயற்கை முறை கருத்தரிப்பு என்பவற்றை நிகழ்த்துவதில் முன்னேற்றம் ஏற்படவுள்ளது என்று உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இந்தப் பரிசோதனை எலிகளின் திசுக்களில் இருந்து முட்டைகள் படிப்படியாக உருவாக்கப் பட்டு பின்னர் அவை மிகத் திருத்தமான சூழலில் முழுமையாக வளர்க்கப் பட்டது. இதில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் பலனாக மனித திசுக்களை வைத்து மனித முட்டையை பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் வெற்றிகரமாக பல தோல்விகளுக்குப் பின் வளர்க்கப் பட்டுள்ளது.

உலகில் முதன் முறை மனித முட்டைகள் வெற்றிகரமாக இவ்வாறு உருவாக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS