கட்டுரைகள்
Typography
அண்மையில் மேற்கொள்ளப் பட்ட புதிய ஆய்வொன்றில் மாணவர்களது அறிவுத்திறனின் (intelligence) அரைப்பங்கு அவர்கள் கற்கும் அளவை விட அவர்களது ஜீன்களில் தான் தங்கியுள்ளது எனக் கண்டறியப் பட்டுள்ளது.
மீதமுள்ள அரைப்பங்கு அவர்கள் கற்கும் சூழல், ஊட்டச்சத்து மற்றும் பெற்றோரின் ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. எடின்பேர்க் பல்கலைக் கழகத்தால் சுமார் 20 000 மாணவர்களது டி என் ஏ களை ஆராய்ந்த போதே இந்தப் புள்ளி விபரம் பெறப்பட்டுள்ளது. மேலும் அர்ம்ஸ்டெர்டாமின் விர்ஜே பல்கலைக் கழகத்தால் 78 000 பேரின் மரபணுத் தகவல்கள் ஆராயப் பட்டும் இதே முடிவு எட்டப் பட்டுள்ளது.
 
தற்போது உயிரியலாளர்கள் வசம் அறிவுத்திறனுக்கு வழி வகுக்கும் 52 ஜீன்கள் அடையாளம் காணப் பட்டுள்ளதுடன் இதில் 40 ஜீன்கள் மிகவும் புதிய கண்டுபிடிப்புக்கள் என்றும் கூறப்படுகின்றது. மேலும் விஞ்ஞானிகளின் இந்த ஜீன்கள் தொடர்பான ஆய்வில் இவை ஒருவர் உயரமாக இருக்க அல்லது உடல் மெலிந்தவராக இருப்பதற்குக் காரணமாக உள்ளதும் ஏன் சிலர் புகைப் பிடிப்பதில் ஆர்வம் இல்லாதவராக இருப்பதற்கும் காரணமாக உள்ளதும் கண்டறியப் பட்டுள்ளது. 
 
இதுதவிர இந்த ஜீன்களை உடையவர்கள் அல்செய்மர் போன்ற மறதி நோய் இல்லாதவர்களாகவும் மன அழுத்தம் குறைந்தவர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
 
BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்