Tuesday, Oct 21st

Last update06:32:45 AM

2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா & சத்தியார்த்தி : ஓர் விரிவான பார்வை

2014 ம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்ட நோபல் பரிசு, உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்தும், சிறுவர்களுக்கான கல்வி உரிமையை வலியுறுத்தியும் குரல்கொடுத்து வந்த இருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் பாகிஸ்தானியப் பெண் மலாலா. இவருக்கு வயது 17 மாத்திரமே. மற்றையவர் இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்தி. இவருடைய வயது 60.

Read more...

தீர்வை நோக்கிய தீர்ப்பு : ஜெயலலிதாவின் ஜாமின் சாத்தியமா?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியில் வருவதற்கான சாத்தியங்கள் எந்தளவு உள்ளன? ஜாமின் மனுத் தாக்கல் மேற்கொள்வதில் எவ்வாறான ஆபத்துக்கள் உள்ளன?, ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் எழும் கருத்துக்கள் எவை? எதற்காக ஜெயலலிதா மீதான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்கின்றனர்? என விரிவாக அலசுகிறது இக்கட்டுரை.

Read more...

நமது பூமியின் உயிர் வாழ்க்கை பால்வெளி அண்டத்தின் வேறு ஏதேனும் பாகத்தில் இருந்து வந்திருக்கலாம்!:புதிய ஆதாரம்

நமது பால்வெளி அண்டத்திற்கு (Milky way galaxy) உள்ளே உள்ள வேறு ஏதேனும் பாகத்தில் இருந்து நமது பூமியில் உயிர் வாழ்க்கைக்கான கட்டமைப்புக்கள் வந்திருக்கலாம் என புதிய ஆதாரத்தின் மூலம் ஊகிக்கப் படுகின்றது.

Read more...

'Gravity' ஹாலிவுட் திரைப்பட செலவை விடக் குறைந்த செலவில் மங்கல்யான் விண்கல செயற்திட்டம் வெற்றி!

இந்தியாவின் மங்கல்யான் அல்லது செவ்வாய் சுற்று வட்ட செயற் திட்டம் (Mars Orbitter Mission - MOM) செய்மதி சுமார் 300 நாட்களாக 420 மில்லியன் மைல்கள் பயணித்து இன்று காலை 7 மணி 41 நிமிடங்கள் அளவில் செவ்வாய் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

Read more...

ஹயான் சூறாவளி - சுப்ரபாரதிமணியன்

7000 தீவுகளைக் கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டை 2013 நவம்பரில் ஒரு சூறாவளிப் புயல் நிலை குலைய வைத்தது. அதன் பெயர் ஹயான்.

Read more...

இசை உலகின் பேரிழப்பு : மாண்டலின் சிறீனிவாஸ் பற்றி ஓர் அலசல்!

குழந்தை மேதை என்று அறியப்பட்ட மாண்டலின் ஸ்ரீநிவாஸ் கல்லீரல் செயலிழப்பால் மறைந்தார் என்பதை மிகுந்த மன வேதனையுடன் இங்கு பதிவு செய்ய விழைகிறேன்.  

Read more...

ஸ்காட்லாந்து தனி நாடாகுமா?

இன்று 18.9.2014 ஸ்காட்லாந்து மக்கள் ஒரு மிகப்பெரிய முடிவை எடுக்கப்போகிறார்கள். இங்கிலாந்திலிருந்து பிரிந்து ஸ்காட்லாந்து தனி சுதந்திர நாடாக இருக்க விழைகிறதா? அல்லது இங்கிலாந்துடன் இணைந்து இருக்கவே விரும்புகிறதா? இதைப்பற்றிய வாக்கெடுப்பு இன்று காலை தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அதோடு நாளை காலை முடிவு வெளியாகவுள்ளது.

Read more...

சூரிய வெளிச்சம் தற்கொலை செய்யும் வீதத்தைத் தூண்டக் கூடியது!:விஞ்ஞானிகள் தகவல்

வியென்னா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில் எந்த எந்தக் காரணிகள் சமுதாயத்தில் தற்கொலை செய்து கொள்வதற்கான சதவீதத்தைத் தூண்டுகின்றன என்பது குறித்த தகவல்களைச் சேகரித்தனர்.

Read more...

கடவுள் துணிக்கை எமது பிரபஞ்சத்தை எப்போது வேண்டுமானாலும் அழிக்கக் கூடியது!:ஸ்டீபன் ஹாவ்கிங்

விஞ்ஞானிகளின் கண்களுக்கு எளிதில் புலப்படாததும் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து அணுக்களினதும் கட்டமைப்பையும் அளவையும் தீர்மானிக்கும் அடிப்படைத் துணை அணுத் துணிக்கையுமான கடவுள் துணிக்கை எனப்படும் ஹிக்ஸ் போசொன் (Higgs boson) இனது இருப்பு முதன் முறையாக 2012 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் சேர்ன் (CERN) ஆய்வு கூடத்தில் நடத்தப் பட்ட மிக முக்கியமான பரிசோதனையில் அணு இயற்பியல் அறிஞர்களால் உறுதி செய்யப் பட்டிருந்தது.

Read more...

More Articles...

comments powered by Disqus