ஒரு காலத்தில் செதுக்கி செதுக்கி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரபுசாலமன், பிற்பாடு ஏதேதோ ஆகி பிதுக்கி பிதுக்கி எடுத்த பேஸ்ட்டுதான் இந்த தொடரி! ஒரு அற்புதமான தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியும், ஒரு நல்ல கதைக் களத்தை சொதப்பி சுண்ணாம்பு டப்பா ஆக்கியதற்கு வருத்தமும் உரித்தாகுக! அப்படியே தனுஷ் என்ற நல்ல நடிகனின் மார்க்கெட்டில் கரித்துண்டால் கிறுக்கியதற்கும் சேர்த்து ஒரு கண்டனத்தை பதிவு செஞ்சுக்குங்க பஞ்சாயத்து!

Read more: தொடரி - விமர்சனம்

காயம் சின்னதுதான். பேன்டேஜ்தான் பெருசு! கையடக்கமான கதைக்குள் இரண்டு விக்ரம்களை இறக்கிவிட்டு பேன்டேஜ்ஜை பெரிசாக்கியிருக்கிறார் ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர்! ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் கையிலெடுக்க வேண்டிய கதையை, ஆனந்த் ஷங்கர் இயக்கியிருப்பது நல்லதா, கெட்டதா? சரியா, தப்பா? என்கிற விவாதங்கள் படம் முடிந்த பின்பு தியேட்டர் வாசலிலேயே சுட சுட நடப்பதுதான் இப்படத்தின் ப்ளஸ்சும் மைனஸ்சும்!

Read more: இருமுகன்- விமர்சனம்

தட்டு முழுக்க உப்பையும், ஓரத்துல சாதத்தையும் வச்சு திங்கிற ஊர் போலிருக்கு! அவ்வளவு ரோசமும் ரத்தமாக பொத்துக் கொண்டு வழிகிறது படம் முழுக்க! மானத்தையும் வீரத்தையும் மட்டுமில்ல, துரோகத்தையும் துவையலா அரைச்சு தின்போம்ல... என்கிறது படத்தில் வரும் சில கேரக்டர்கள்.

Read more: கிடாரி விமர்சனம்

கடுகு டப்பாவுக்குள் காதல், காய்கறி மூட்டைக்குள் காதல், சந்து பொந்து, சைடு கண்ணாடியெங்கும் காதல் என்று காதலை விதவிதமாக பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. பர்தா போட்ட முஸ்லீம் பெண்ணுக்கும், பட்டை போட்ட இந்து பையனுக்கும் லவ் என்பது மேற்படி சங்கதிகளுக்குள் ஒன்றாகிப் போய் அநேக வருஷங்களாகிவிட்டது.

Read more: மீண்டும் ஒரு காதல் கதை - விமர்சனம்

காரக் குழம்புல ஏதுடா கட்டி வெல்லம்? கெட்டது செய்தால், கெட்டதே கிடைக்கும் என்பதுதான் இப்படத்தின் மையப்புள்ளி. இந்த மையப்புள்ளியை சுற்றி மணிகண்டன் போட்டிருக்கும் அழகான விறுவிறுப்பான கோலம்தான் குற்றமே தண்டனை! படம் ஆரம்பித்த அந்த நிமிஷமே கதையும் ஆரம்பம் ஆகிவிடுகிறது.

Read more: குற்றமே தண்டணை - விமர்சனம்

கவுண்டரின் வாய்ஜாலம், தமிழ்சினிமாவுக்கே வர்ணஜாலம்! ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த அற்புதத்தை, தனது எழுபதாவது வயதிலும் இளைக்காமல் வைத்திருக்கிறார் கவுண்டமணி! அவர் வாயைத் திறந்தால், கலீராகிறது தியேட்டர். அவர் வராத காட்சிகள் ஒவ்வொன்றும் அவர் வருவாரா என்று ஏங்க வைக்கிறது.

Read more: எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது- விமர்சனம்

திசை காட்டும் கருவிக்கு மனமெல்லாம் வடக்கு! சீனு ராமசாமியும் அப்படிதான். எதற்காகவும் தன்னை திசை மாற்றிக் கொண்டவரல்ல. வணிகக் குப்பைகளில் புரண்டெழுகிற சினிமாவில், வாழ்க்கைக் கதைகளுக்கு வழியேது? இந்த எண்ணத்தை, அவநம்பிக்கையை முற்றிலும் ஒழித்திருக்கிறது தர்மதுரை.

Read more: தர்மதுரை - விமர்சனம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்