தட்டு முழுக்க உப்பையும், ஓரத்துல சாதத்தையும் வச்சு திங்கிற ஊர் போலிருக்கு! அவ்வளவு ரோசமும் ரத்தமாக பொத்துக் கொண்டு வழிகிறது படம் முழுக்க! மானத்தையும் வீரத்தையும் மட்டுமில்ல, துரோகத்தையும் துவையலா அரைச்சு தின்போம்ல... என்கிறது படத்தில் வரும் சில கேரக்டர்கள்.

கவுண்டரின் வாய்ஜாலம், தமிழ்சினிமாவுக்கே வர்ணஜாலம்! ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த அற்புதத்தை, தனது எழுபதாவது வயதிலும் இளைக்காமல் வைத்திருக்கிறார் கவுண்டமணி! அவர் வாயைத் திறந்தால், கலீராகிறது தியேட்டர். அவர் வராத காட்சிகள் ஒவ்வொன்றும் அவர் வருவாரா என்று ஏங்க வைக்கிறது.

திசை காட்டும் கருவிக்கு மனமெல்லாம் வடக்கு! சீனு ராமசாமியும் அப்படிதான். எதற்காகவும் தன்னை திசை மாற்றிக் கொண்டவரல்ல. வணிகக் குப்பைகளில் புரண்டெழுகிற சினிமாவில், வாழ்க்கைக் கதைகளுக்கு வழியேது? இந்த எண்ணத்தை, அவநம்பிக்கையை முற்றிலும் ஒழித்திருக்கிறது தர்மதுரை.

டபுள் ஆக்ட் கதை. ஆனால் சிங்கிள் ஷாட் உதை. கதை எவ்வளவு பழசாக இருந்தாலும், திரைக்கதையில் உப்பு மிளகாய் இஞ்சி பூண்டு எல்லாம் சேர்த்து, ‘நாக்குக்கு தோதாக கொடுப்பதில் நான்தாண்டா கில்லாடி’ என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.

கடுகு டப்பாவுக்குள் காதல், காய்கறி மூட்டைக்குள் காதல், சந்து பொந்து, சைடு கண்ணாடியெங்கும் காதல் என்று காதலை விதவிதமாக பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. பர்தா போட்ட முஸ்லீம் பெண்ணுக்கும், பட்டை போட்ட இந்து பையனுக்கும் லவ் என்பது மேற்படி சங்கதிகளுக்குள் ஒன்றாகிப் போய் அநேக வருஷங்களாகிவிட்டது.

காபிக்கு பேர் போன கும்பகோணத்தில் நடக்கும் கதை. ஆனால் காபி வாசனைக்கு பதில் ஒரே ரத்த வாசனை! கதையே ரவுடிகளை பற்றியது என்பதால், ஏ பாசிட்டிவ்-ல் ஆரம்பித்து இசட் நெகட்டிவ் வரைக்கும் ரத்தக்குளியல் நடத்துகிறார் ஹீரோ. சட்டையிலிருந்து பிளேடை உதட்டாலேயே உருவி, அதை புரோட்டா மெல்லுவதை போல மென்று எதிராளி முகத்தில் துப்பி ஓட வைக்கும் ‘ஷார்ப்’பான ரவுடி ஜீவா. இவருக்கு வரும் காதலும், சோதனையும்தான் முழு படம்.

பார்வை 1 : சிந்திக்கிறவனெல்லாம் சிந்தனாவாதியல்ல. சிந்தனையால் சீர் திருத்தம் செய்பவனே அவன்! பத்திரிகையாளர் ராஜு முருகனின் சிந்தனையில் பாவப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை படமாக விரிந்திருக்கிறது. தமிழ்சினிமாவுக்கே இந்தக் கதை புதுசு.

More Articles ...

Page 4 of 5

Most Read