திரைவிமர்சனம்
Typography

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நாவல் தன்மையுடன் ஒரு திரைப்படம் கையாளப்பட்டிருக்கிறது. படத்தின் இயக்குனர் தனசேகர் ஒரு சிறுகதை ஆசிரியர். இலக்கிய வாசகரும் கூட. எழுத்தாளர் ஜெய மோகன் சிபாரிசில் மணிரத்னத்திடம் உதவியாளராக சேர்ந்தவர். மணிரத்தினம் தயாரிப்பிலேயே வானம் கொட்டட்டும் படத்தை இயக்கியிருக்கிறார்.

கதை தனசேகர் உடையது என்றாலும், படத்தின் கிரடிட் டைட்டிலில் கதை என்று மணிரத்னம் பெயரும் வருகிறது. முதல் வாய்ப்பு கொடுத்ததனால் மணிரத்தினம் கொடுத்த உள்குத்து போலும் இது. சரி இனி விமர்சனத்துக்கு வருவோம்.

கரிசல் பூமியான தேனி மாவட்டத்தில் வாழை விவசாயம் செய்து கௌரவமாக வாழ்ந்து வருகிறார்கள் அண்ணன் பாலாஜி சக்திவேல் தம்பி சரத்குமார் இருவரும். கிராம பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் பாலாஜி சக்திவேல் ஜெயித்து விடக்கூடாது என்று கருதி அவரை அரிவாளால் வெட்டி விடுகிறார் அவரது அரசியல் எதிரி. இதை அறிந்து கொதித்துப் போகும் தம்பி சரத்குமார், அண்ணனை எதிரி வெட்ட பயன்படுத்திய அதே அரிவாளால் அந்த எதிரியை கொலை செய்துவிடுகிறார்.

10 வயது மகனும் 5 வயது மகளும் கொண்ட சரத்குமார் தனது மனைவி ராதிகா வையும் குழந்தைகளையும் அண்ணன் அம்மாவையும் பிரிந்து ஆயுள் தண்டனை அனுபவிக்க ஜெயிலுக்கு சென்று விடுகிறார். கிராமத்தில் இருந்தால் தந்தையைப் போலவே பிள்ளைகளும் ஆகிவிடும் என்று பயந்து சென்னைக்கு குடி வருகிறார் ராதிகா.

பிள்ளைகள் வளர்ந்து வளர்ந்து விடுகிறார்கள். விக்ரம் பிரபுவும் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் அவர்கள். அதேபோல எதிரியின் இரட்டைப் பிறவி மகனாக வளர்ந்து நிற்கிறார்கள் நந்தா சகோதரர்கள். சிறையிலிருந்து வெளியே வரும் சரத்குமாரை போட்டுத்தள்ள பதினாறு வருட வகையுடன் காத்திருக்கிறான் பெரியவன் நந்தா. சிறையிலிருந்து வெளியே வரும் சரத்குமார் குடும்பத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டாரா, எதிரியின் மகனால் அவரைக் கொல்ல முடிந்ததா என்பது மீதிக்கதை.

மிக எளிய இந்த கதையை ஒரு ஒரு நாவலில் விரியும் விவரணை களுக்கு இணையாக காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் தனசேகர். தென்தமிழகத்தின் வாழை விவசாயம் குறித்த வியாபார விவரணைகள் காட்சிகளாக நம்பகமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அண்ணன் தம்பி இருவருக்கும் இடையிலான பாசம், திருமணம் விரும்பாமல் தம்பி வளர்த்த ஒரு அண்ணனின் பாசம், அப்பாவை பிரிந்த சிறார்கள் அண்ணன் தங்கையாக வளர்ந்து நிற்பதில் இருக்கக்கூடிய சிக்கல்கள், உயர் மேல்தட்டு குடும்பத்தில் இருக்கக்கூடிய பொருளாதார சிக்கல்கள் , தந்தை இல்லாமல் குழந்தைகளை வளர்க்கும் ஒரு தாயின் சிக்கல்கள், பழி உணர்ச்சி மனதில் நீங்காத வடுவாக தொடர்வது என பல விஷயங்களை சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.

கதாபாத்திரங்களை எழுதுவதில் ஒரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியரின் அனுபவம் தனசேகர் இடம் வெளிப்பட்டிருக்கிறது. வசனங்களும் சிறப்பாக உள்ளன. காட்சிகள் விரியும் தேனி மாவட்டம், சென்னையின் திருவல்லிக்கேணி இரண்டும் சிறப்பாக பதிவாகியிருக்கின்றன. சரத்குமார் ராதிகா ஜோடிக்கு இது மிக முக்கியமான படம். யால இசைக்கலைஞர் மற்றும் நடிகையான மடோனா செபாஸ்டினுக்கும் விக்ரம் பிரபுவுக்கும் இடையிலான காதல் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஒரு நடிகர் கூட வீண் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவு தொடங்கி பின்னணி இசை வரை அனைத்தும் ஓர் இலக்கிய பதிவை திரையில் பதிந்தது போல் பங்களிப்பு செய்திருக்கின்றன. வானம் கொட்டட்டும் குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த ஒரு உணர்ச்சிக் காவியம் அல்லது தேர்ந்த உணர்ச்சி நாடகம் என்றும் சொல்லலாம்

- 4தமிழ்மீடியா விமர்சனக் குழு.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்