அநேக பெண்களின் ‘கடுப்ப’ங்கரையே, அடுப்பங்கரைதான்! இந்த ‘புகைச்சல்’ மனங்களுக்கு ஒரு புல்லாங்குழல் பீட் போட்டால், அதுதான் ‘காற்றின் மொழி’! ‘என்னால முடியும்’ என்ற மந்திரச் சொல்லை, கிடைக்கிற இடத்திலெல்லாம் பயன் படுத்துங்கள்.

Read more: காற்றின் மொழி / விமர்சனம்

‘தாயம் உருட்டி விளையாடுவதற்கு சி.எம். நாற்காலி என்ன அதிர்ஷ்ட குலுக்கலா?’ என்று அங்கலாய்க்கிற அத்தனை அரசியல்வாதிகளுக்கும், நடுவில் எவன் நுழைந்தாலும் நடு மண்டை சுடுமல்லவா?

Read more: சர்கார் / விமர்சனம்

ஆவியில்லாத ஹாரர் படமா? அருவா இல்லாத ஹரி படமா? காதல் இல்லாத கவுதம் படமா? இருக்காதல்லவா... அப்படிதான் க்ரைம் இல்லாத வெற்றிமாறன் படமும்! எமனை இடுப்பிலேயே கட்டிக் கொண்டு திரிகிறார்கள் எல்லாரும். அசருகிற நேரத்தில் ஒரு சதக் சதக்! இமைக்கிற நேரத்தில் ஒரு கதம் கதம்! எல்லாம் முடிந்துவிடுகிறது.

Read more: வடசென்னை / விமர்சனம்

பொருள் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் பொட்டலம்! ‘நோட்டா’ என்ற தலைப்புதான் இப்படத்தின் பொட்டலம்! கடைசியில் பொருளை தின்றுவிட்டு பொட்டலத்தை தேடினால் ‘அது எதுக்குய்யா இப்போ?’ என்கிறது படம். மாநிலமும், மக்களும் மயங்கிக் கிடப்பதே இரண்டே இரண்டில்தான். ஒன்று சினிமா. இன்னொன்று அரசியல். அப்படி சினிமாவுக்குள் அரசியலையும், அரசியலுக்குள் சினிமாவையும் சொன்ன படங்கள் பல இருந்தாலும், ‘நோட்டா’வில் என்ன புதுசு? இந்த ‘நோட்டா’ என்ற தலைப்பு மட்டும்தான் புதுசு. மற்றதெல்லாம் நாம் கேட்டு கேட்டு ஆறிப் பழசான அதிரடி நியூஸ்கள்தான்.

Read more: நோட்டா - சினிமா விமர்சனம்

கொதிக்கிற கோழியே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் பசியா இருந்தா, அந்தக் குழம்பு மட்டும் எப்படி ருசியா இருக்கும்? ‘ஆவ்...’வென சந்தோஷ ஏப்பம் வருமென்று பார்த்தால், சின்ன விக்கலோடு ரசிகர்களை அனுப்பி வைக்கிறார்  இயக்குனர் லிங்குசாமி. இத்தனைக்கும் விருந்தென்றால் விருந்து... ஏழு வீட்டு விருந்து!

Read more: சண்டக்கோழி2 / விமர்சனம்

‘இந்தா புள்ளைய வச்சுக்கோ... உன் லேப்டாப்பை கொடு’ என்று முக்கால்வாசி கணவன்களை ‘தாயுமானவனாக்கி’ தள்ளிவிட்டுப் போகிறார்கள் பெண்கள்! பிள்ளைகளின் வருங்காலம் பொசுங்கி விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஒப்பந்த வாழ்வின் தீப்பந்தங்களுக்குள் வாழ ஆரம்பிக்கிறார்கள் ஆண்கள்!

Read more: ஆண் தேவதை - சினிமா விமர்சனம்

அனார்கலி காலத்திருந்தல்ல, அதற்கு முன்னால் ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே  நண்டுவாக்கிளியின் கொடுக்கு போல துரத்துகிறது காதல். சிலர் அந்த கொடுக்கின் மீதமர்ந்து விஷம் அருந்துகிறார்கள். சிலர் கொடுக்குக்கே தேன் தடவுகிறார்கள். 96 தேன் தடவுகிற படம்!

Read more: 96 - சினிமா விமர்சனம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்