திரைப்படவிழாக்கள்
Typography

70வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Doors பிரிவில், Mata Nam Ahuna (While You Slept ) எனும் குறுந்திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இலங்கையில் சிவில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், சீன வர்த்தக, கைத்தொழில் முதலீடுகள் அதிகரித்திருந்தன. ஒப்பந்த பணியாளர்களின் வருகையும் அதிகரித்திருந்தது. அதனால் ஏற்பட்ட பல விளைவுகளில் ஒன்றை படம் அலசுகிறது.

சீனப் பணியாளர்கள் நிலைகொண்டுள்ள இலங்கையின் தென் பகுதி துறைமுக நகரங்களில் ஒன்றில் உருவுதளமொன்றாக (Massage parlor) தம்மை காண்பித்துக் கொள்ளும் ஒரு பாலியல் விடுதி. அதில் பணிபுரியும் கிராமத்துச் சிங்களப் பெண்கள், சீன வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கின்றனர். அதில் சீனப் பெண் போன்று தம்மிடம் தோற்றம் இருப்பதாக கருதும் ஒருத்தி, தனக்கான ஒப்பனை அலங்காரம், ஆடை, கவர்ச்சி, காமம் அனைத்தையும் சீன வாடிக்கையாளர்களுக்கு ஏற்றால் போன்றே மாற்ற முனைகிறாள். ஆனால் சீனாவிலிருந்து ஒரு பெண், இந்த உருவுதளத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டதை அடுத்து, ஊர்க்குருவி பருந்தாகாது எனும் கதையாகிப்போகிறது.

நதியா பெரேராவின் நெறியாள்கையில் உருவாகியுள்ள இக்குறுந்திரைப்படத்தின் கீதா அலஹகோன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் காட்சியமைப்பு எதிலும், இவ்விடுதிகளில் பணிபுரியும் பெண்கள் அதை சித்திரவதையாக அனுபவிப்பதாகவோ, அல்லது அதிலிருந்து தப்பிச் சில்ல முடியாது தவிப்பதாகவோ காட்சிப்படுத்தியிருக்க மாட்டார் நதியா பெரேரா. மாறாக இவை தம்மிடம் சர்வ சாதாரணமாகிப் போனதொன்றாக, பிறதொழில்கள் போன்று இதில் தம்மை எப்படித் தக்க வைத்துக்கொள்ளுவதற்கான போராட்டமாகவே காண்பித்திருப்பார்.

படம் முடிவடைந்த போது கேள்வி பதில் நிகழ்வில் நதியா பெரேராவிடம் இது குறித்து ஒரு பார்வையாளர் கேள்வி எழுப்பிய போது, உலகெங்கும் பாலியல் தொழிலில் இருக்கும் பெண்கள் என்ன அவலத்தை எதிர்நோக்குகிறார்களோ அதைத் தான் இப்பெண்களும் அனுபவிக்கிறார்கள். ஆனால் இப்படத்தின் மையக்கரு, பாலியல் தேவையின் புதிய வடிவமும், அதற்கான வியாபாரம்/ வணிக வருவாயில் பலியாகும் பெண்களைப் பற்றியதும் என்றார் பெரேரா.

மேலும் பேசுகையில் «அம்பாந்தோட்டை அருகில் ஒரு உருவுதளம் ஒன்றில் பணிபுரிந்த ஒரு சிங்கள இளம் பெண் நன்கு சீன மொழி பேசியதை பார்த்து ஆச்சரியமடைந்து அவரிடம் பேச்சுக் கொடுத்து பழகிய போது, உருவுதளத்தின் பின்புறத்தில் நடைபெறும் இச்சம்பவங்கள் குறித்து அறிய முடிந்தது. ஆரம்பத்தில் அப்பெண்ணை பற்றி ஆவணத்திரைப்படம் ஒன்றை உருவாக்கவே முனைந்தேன். ஆனால் சில காலம் கழித்து, அப்பெண்ணிடம் தொடர்பு கொள்ள முயன்ற போது அப்பெண் மாயமாகிவிட்டாள். அவள் அனுபவங்கள் பதிவு செய்யப்பட வேண்டிய தேவையை உணர்ந்தேன். இத்திரைப்படம் உருவாகியது» என்றார்.

இலங்கையின் வெளியறுவுக் கொள்கை அரசியலையும் இத்திரைப்படம் மறைமுகமாக தாக்குகிறதே, எப்படி எதிர்விளைவுகளை அதனை சமாளித்தீர்கள் என கேள்வி எழுப்பிய போது, «அதனால் தான் இதனை புனைவுச் சித்திரமாக மட்டுமே உருவாக்க முடியும் எனும் முடிவுக்கு வந்தோம். இக் குறுந்திரைப்படம் இலங்கையின் கொழும்பு, யாழ் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டமை தவிர பெரிதாக பிரபலமாகாததால் பெரியளவில் அரசியற் கவனம் பெறவில்லை அது ஒருவகையில் நன்மைக்கே என்றார்» புன்னகையுடன்.

இம்முறை Open Door பிரிவில் பங்குபற்றிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை திரைப்படங்களை உருவாக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் தெற்காசிய சினிமாவின் இன்றைய நிலை குறித்த கலந்துரையாடல் ஒன்று பின்னர் நடைபெற்ற போது நதியா பெரேராவும் அதில் கலந்து கொண்டு இலங்கையின் இன்றைய சினிமா குறித்து பேசினார்.

«திரைப்படங்களை தயாரிக்க முன்வருபவர்களிடம் யதார்த்த சினிமாவின் கலையியல் குறித்த போதிய கல்வி அறிவோ, விழிப்புணர்வோ இன்மை, தணிக்கை குழுவினரின் அனுமதிப் பெறுவதில் சிக்கல்/தாமதம் போன்றவை» இன்றளவும் சவாலாக இருப்பதாக கூறினார். அதோடு மும்பையின் மொத்த சனத்தொகை இலங்கையின் சனத்தொகையை விட அதிகம். அங்கு 3500 சினித் திரையரங்குகள் உள்ளன. இலங்கையின் 180 சினிமாத் திரையரங்குகளே பிரபலமான இயங்கு நிலையில் உள்ளன என கட்டமைப்புச் சார்ந்த சிக்கல்களையும் எடுத்துக் கூறினார்.

இலங்கையின் இளம் மாற்றுச் சினிமாக் கலைஞர்கள், நெறியாளர்ள் ஒன்றிணைந்து சுயாதீன/சுதந்திர சினிமா இயக்கம் ஒன்றாக உருவெடுத்து வருவதையும், ஒவ்வொரு வருடமும் வெளிவரும் 15 சராசரித் திரைப்படங்களில், மூன்று திரைப்படங்கள் சர்வதேச அளவில் திரைப்பட விழாக்களில் கவனம் பெறுவதையும் நேர்மறையான நம்பிக்கைகளாகவும் சுட்டிக்காட்டினார்.

அதோடு இலங்கையின் உள்ளூர்த் திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்படும் திரைப்படங்களை பார்வையிட பெருமளவிளான இலங்கையர்கள் வருவதைச் சுட்டிக்காட்டி, இலங்கையின் சினிமா ஆரோக்கியமான பாதையில் வளர்ச்சி அடைவது, சினிமா வியாபாரம் செய்பவர்களின் கைகளிலேயே இருக்கிறது என்றார்.

மொத்தத்தில் இலங்கையின் நம்பிக்கையான புதிய சினிமா நெறியாளர்களில் நதியா பெரேராவும் நிச்சயம் கவனம் பெறுவார் என்பதை அவருடைய Mata Nam Ahuna (While You Slept ) குறுந்திரைப்படத்தில் உணர முடிந்தது.

- லோகார்ணோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்

'Mata Nam Ahuna' 'while you slept' has been screened on 70th Locarno international film festival's open doors section recently. The Chinese influence in Sri Lanka on trade & industrial investments and the presence of Chinese contract workers has been increased since the end of civil war in Sri Lanka. 

This film analyses one of the effects emerging from this influence. There was a sexual accommodation in a port city of Sri Lanka's southern region in the name of 'Massage Parlor.' Sinhalese village women who works in this Parlor are also serving to Chinese customers who coming there. There was a woman who thinks that she has a Chinese look tries to attract Chinese customers by changing her make ups, dresses, fashion and lust among other women. Unfortunately a real Chinese woman imported from China to this parlor spoiled her intention soon.

Geetha Alahakhoon has been played the primary role in this short film created by Nadya Perera. One of the notable aspect of the way this film pictures the incidents is that Those women who works inside this accommodation do not feels their commitments to serve Chinese as torture nor wanted to escape.

Instead they take it as very normal habit as other jobs and it is shown that they even struggles to keep them self in this job.

When a question raised to Perera about that aspect, after the film shown , she explained 'The women shown in this film faces the same circumstances as all the women in the world who connected with prostitution faces. But the theme of this film is about those women whose life spoiled by the income coming through sex industry and the demand of new form of satisfying sexual need of Men and women.

When Perera says about the way her idea of this film come to her mind she said, 'I had met a Sinhalese women in a 'massage parlor' in one of southern region who was able to speak Chinese very well and surprised. While I talked to her more deeply I got to know about the prostitution happens in that parlor, her story and experiences. Then I decided to make a documentary about that women at the beginning. Some months later I tried to contact her to draw the full story but she was disappeared. Though I strongly recognized that her experiences should be recorded and reach society. That is the motivation. 'Mata Nam Ahuna' is made.

When somebody asked, 'How did you managed the effects raised on this movie while it is criticizing the Foreign policy of Sri Lankan government and its politics in background ?' she replied, It is because we decided to make this film only as fictional. This short film was only shown in Sri Lanka's Colombo, Jaffna and international film festivals and not become much famous. therefore It didn't receive any political attention severely.'

The directors and producers of Pakistan, Afghanistan and Sri Lankan films screened in this year's open door section were participated in a conference took place on South Asian Cinema's present situation after many short films were shown. Nadya Perera also participated in this conference and spoken about Sri Lanka's present cinema.

She described, 'The lack of knowledge on the art of realistic cinema, lack of awareness on social issues and the complexity and delayed process on issuing censor certificate were big challenges on making films in Sri Lanka even today. The population of Mumbai is greater than Sri Lanka's  total population. There are 3500 cinema theaters in Mumbai. But in Sri Lanka there are only 180 Cinema theaters that are popular and active. This is an influential structural complexity.

On the other hand there is an independent cinema movement is emerging in Sri Lanka through the combine efforts of young alternative artists and social workers. There are almost 15 films released on average every year and at least 3 films are getting attention on international film festivals. These are the positive hopes on the growth of Sri Lankan film industry.'

Finally, Nadya Perera noted that, 'There are many Sri Lankans make their presence to see those films screened in Sri Lanka's inner film festivals. Therefore the growth of Sri Lankan cinema in a healthiest path is in the hands of the people who does cine business.'

Overall, we felt that Nadya Perera surely will be an director among hopeful Sri Lankan new cinema directors through her short film 'Mata Nam Ahuna' (While You Slept)

- 4tamilmedia team

Most Read