திரைப்படவிழாக்கள்
Typography

இந்தியாவில் நடைபெறும் முக்கிய திரைப்பட விழழாக்களில் ஒன்றான, கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50வது தொடர் நேற்று ஆரம்பமாகியது. வரும் 28ந் திகதி வரை நடைபெறும் இவ் விழாவில் சர்வதேச, இந்தியா என்ற வகையில்,200க்கும் மேற்பட்ட திரைபடங்கள் காட்சிப்படுத்தப்டவுள்ளன.

ஈரான், கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட 76 நாடுகளில் உருவான, பல்வேறு மொழித் திரைப்படங்களுடன், இந்திய மொழிகளைச் சேர்ந்த 41 திரைப்படங்களும், 50வது தொடரில் காட்சிப்படுத்தப்டவுள்ளன.
தமிழ்மொழியிலான திரைப்படங்கள் வரிசையில், இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்த "ஒத்த செருப்பு". நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் படமும் திரையிடப்படுகின்றன.

கோவா சர்வதேச திரைப்பட விழா 50வது தொடரை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவா முதலமைச்சர் பிரமோத் சவாந்த், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்கள். இத் தொடக்கவிழாவில், இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக நடிகர் ரஜினிகாந்துக்கு ‘Icon of Golden Jubilee’ பொன் விழாச் சின்னம், விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, நடிகர் அமிதாப் பச்சன், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் இணைந்து விருதினை வழங்கினர்.

விருது பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த், தமக்கு சிறப்பு விருது வழங்கி சிறப்பித் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து, விருதினைத் தம்மை வாழ வைத்த தெய்வங்களாகிய தமிழக மக்கள், திரைத்துறையினருக்கு சமர்ப்பிப்பதாகதெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்