திரைப்படவிழாக்கள்
Typography

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில் கௌரவ லியோபார்ட் கிளப் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் ஹிலாரி ஸ்வாங்க் (Hilary Swank).

இதற்காக 10’000 பேர் கூடியிருந்த பியாற்சே கிராண்டே திறந்த வெளி திரையரங்கு பெரு முற்றத்திற்கு அவர் நேற்று அழைக்கப்பட்ட போது, மைக்கைப் பிடித்த ஹிலாரி ஸ்வாங்க் "உங்களை போல் பல மொழி பேசத் தெரிந்தவள் அல்ல நான். ஆனால் ஆங்கிலத்தை தவிர இன்னுமொரு உலக மொழி பேசத் தெரிந்தவள். அது கதை சொல்லும் திறன் மொழி (Story Stelling). எங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனித் தன்மையையும், பன்முகத் தன்மையையும் கொண்டாடும் உலக மொழி அது. அந்த உலக மொழி நிலைக்க தொடர்ந்து பாடுபடுவேன்» என்றார்.

ஹாலிவூட் சினிமாவில், சிறந்த பெண்பால் பிரதிநிதித்துவதற்காக தனது நடிப்பின் மூலம் இரு முறை அகடமி விருது வென்றவர் ஹிலாரி ஸ்வான்க். 1999 இல்  Boys Don’t Cry திரைப்படத்திற்காகவும், 2004 இல் Million Dollar Baby திரைப்படத்திற்காகவும் அவருக்கு விருது கிடைத்தது.

ஆணாக தன்னை மாற்றிக்கொள்ள முனையும் இளம் பெண் திருநங்கையாக Boys Don’t Cry திரைபப்டத்தில் நடித்திருப்பார் ஹிலாரி. ஒரு கட்டத்தில் தான் பிறப்பில் பெண் எனும் இரகசியம் அருகில் இருப்பவர்களுக்கு தெரியவரும் போது படும் வேதனை, ஹிலாரியின் நடிப்பில் மிக யதார்த்தமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். Million Dollar Baby திரைப்படத்தில் பெண் பாக்ஸராக நடித்திருப்பார். ம் ஒரு வயோதிபரின் பயிற்றுவிப்புக்கு கீழ் மனமதளவிலும், உடல் அளவிலும் தன்னை ஒரு முரட்டு பாக்ஸராக வெளிப்படுத்தியிருப்பார். இந்த திரைப்படத்திற்காக அவருக்கு விருது கிடைத்த போது, பெண்ணிய பிரதிநிதித்துவதற்கு கொடுக்கப்பட்ட மிகத் தகுதியான விருது என அவ்வருடத்தில் கொண்டாடப்பட்டிருந்தது.

இவ்விரு திரைப்படங்களும் Retrospective தொகுதியின் கீழ் இம்முறை லொகார்னோ திரைப்படத்தில் திரையிடப்படுகின்றது.

Photos : Locarno Film Festival Photographers

- லொகார்ணோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியலாளர்கள்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்