Saturday, May 25th

Last update06:08:49 PM

மும்பையில் அக்மார்க் தமிழ்ப் பெண்ணாகவே வாழ்ந்துவரும் நடிகை ஸ்ரீதேவி!

நடிகை ஸ்ரீதேவி ஒரு அக்மார்க் தென்னிந்திய நடிகை. தமிழில் ஏராளமான படங்கள் நடித்தவர், பின்னர் தெலுங்கு படவுலகின் முடிசூடா ராணியாக வலம் வந்தவர்.

பின்னர் அப்படியே இந்தி திரையுலகம் சென்று, அங்கு ரசிகர்களின் கனவுக் கன்னியாக பல வருடங்கள் வலம் வந்தவர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று ஏராளமான படங்களில் நடித்த ஸ்ரீதேவி, பிரபல ஹிந்தி படத் தயாரிப்பாளரான போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகி விட்டார். இப்போது இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். இப்போதே ஸ்ரீதேவியின் முதல் பெண்ணுக்கு நடிக்கும் வாய்ப்புக்கள் வந்தும் ஸ்ரீதேவி தன பெண்ணை நடிக்க வைப்பதில் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார்.

போனி கபூருடன் ஒரு வடநாட்டு மருமகளாகவே வாழ்ந்து கொண்டுள்ளீர்கள் போலும் என்று கேட்டபோது, "அப்படியில்லை நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் வீட்டுக்காரர், குழந்தைகளோடு சென்னை வந்து விடுவேன். சென்னையை மறக்க முடியுமா? என் வீட்டுக்காரருக்கு தமிழ் நாட்டு சமையல் ரொம்ப பிடிக்கும், சாம்பார், ரசம் கூட்டு, பொரியல் சாதம் என்று தென்னக சாப்பிட்டுப் பிரியர் அவர்" என்று கூறும் ஸ்ரீதேவி, தமிழில் பேசினால் கணவர் என்றுகூட சொல்வதில்லையாம். சராசரி தென்னக தமிழ் பெண்கள் போல வீட்டுக்காரர் என்று அழகாக உச்சரிப்பாராம். இப்போதும் அப்படித்தான் வாய்க்குவாய் வீட்டுக்காரர் என்றே சொல்கிறார்

மும்பையில் அதிகப் பார்ட்டி கலாச்சாரம் ஆயிற்றே...எப்படி, உன்களுக்கு ஒத்துப் போகிறது என்றால், "முக்கியமான பார்ட்டிகள் என்றால் செல்வதோடு சரி. நீங்கள் நினைப்பது போல தினமும் பார்ட்டிக்கு செல்வது என்பது எனக்கும் பிடிக்காது, என் வீட்டுக்காரருக்கும் பிடிக்காது. நாங்கள் இருவருமே வீட்டில் எப்போதும் இருப்பதையே விரும்பி வாழ்பவர்கள்தான். வீட்டில் நான் எப்போதும் எதயாவது சொல்லி அனைவரையுமே சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பேன். என் வீட்டுக்காரர் எனக்கு ஜோக்கர் என்று பெயர் வைத்துள்ளார்" என்று சொல்கிறார் ஸ்ரீதேவி.

கிட்டத் தட்ட 16 ஆண்டுகாலம் ஓய்வில் இருந்துவிட்ட ஸ்ரீதேவி, இப்போது இங்லீஸ் விங்லீஸ் படத்தின் மூலம் மறுபடியும் ரீ-எண்ட்ரி ஆனார். படமோ அமோக வரவேற்பை பெற்றுவிட இப்போது சிறீதேவியின் கால்ஷீட்டுக்கு கிராக்கி ஏற்பட்டிருக்கிறதாம்.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus