Monday, May 20th

Last update10:24:15 PM

விஜயை வைத்து புதிய படம்! : இயக்குனர் விஜய்

தாண்டவம் படம் வெளிவந்து இருவாரங்களான நிலையில் நிருபர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இயக்குனர் விஜய்  தனது அடுத்த படம் விஜயை வைத்து பண்ண போவதாக தெரிவித்துள்ளார்.

   "மதராசப் பட்டினம்  படத்தின் போதே, நடிகர் விஜய், நாம் இருவரும் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிறகு நான் பேசியபோது அவருக்கு கதை பிடித்துப் போனது. கதை விஜய் ரசிகர்களை ஏமாற்றாத விதத்திலும், அதே சமயம் என்னுடைய முத்திரை பதிப்பதற்கு ஏதுவாகவும்  வந்திருக்கிறது. இன்னும் கதாநாயகி தேர்வு முடிவாகவில்லை' என கூறினார்.

மதராச பட்டிணம், தாண்டவம் படங்களில் நடித்த எமிஜாக்சன் பற்றி குறிப்பிடுகையில் 'எமிஜாக் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஒரு சிறுமிதான். அவருக்கு மாடலிங் செய்வதில்தான் அதிக ஆர்வம் இருந்தது. அவருக்கு ஓரளவு மும்பை படவுலகம் பற்றி தெரிந்து இருந்தது. காரணம் கேத்ரீனா கைப் என்றும் சொல்லலாம்.

அன்பா அழகா பிரஸ் மீட் வீடியோ

திரைப்பட படைப்பாளர்கள் பயிலகத்தின் நிகழ்வு

நீ தானே என் பொன் வசந்தம் தெலுங்குப் பதிப்பில் சமந்தா படங்கள்

ஆதிபகவான் சூட்டிங்க் ஸ்பாட் படங்கள் இங்கே

ஆதிபகவான் பிரஸ் மீட் படங்கள் இங்கே

அவரிடம் நாங்களும் பாலிவுட் ரிலேட்டட் படம்தான் எடுக்கிறோம் என்றெல்லாம் பொய் சொல்லி அவரை சமாதானப் படுத்தி, தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தோம். மதராசப் பட்டினம் படப்பிடிப்பின் போது, எப்போது சூட் முடியும், நான் லண்டனுக்குப் போகவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அடுத்து இப்போது தாண்டவம் படம் லண்டனில் எடுத்தோம், லண்டனில் ஷூட்டிங்  போது, எப்போது சூட் முடியும் நான் இந்தியா போகவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

    காரணம் அவருக்கு இந்தியாவில் ஷங்கர் படம் ஷூட்டிங் இருந்தது. அப்போது அவருக்கு உலக அழகியாக வேண்டும் , மாடலிங் செய்ய வேண்டும் என்று   இருந்த ஆர்வம், மதராசப் பட்டினததுக்குப் பின்னர், பாலிவுட், கோலிவுட் படங்களில் நடித்து நம்பர் ஒன இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது குறிக்கோளாக உள்ளது' என்றார்.

இயக்குனர் விஜயின் பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோ : 

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus