ரூபாய் 21 கோடி இருந்தால் நானும் ரஜினியாவேன்: பெருமான்
- Wednesday, 22 August 2012 21:33

ரூபாய் 21 கோடி இருந்தால் நானும் ரஜினியாவேன் எனும் வசனத்தோடு தொடங்குகிறது பெருமான் திரைப்படம்.
இந்த படத்தின் சப் டைட்டில் தி ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமான் படத்தின் இயக்குனர் ஜெ. ராஜேஷ் கண்ணாவிடம் தனக்கே உரித்தான பாணியில் கேட்டிருக்கிறார். கண்ணா, அதென்ன சப் டைட்டிலில் தி ரஜினிகாந்த் னுட்டு சொல்லியிருக்கீங்களே..என்று.
பரத் நம்பும் ராசியான கெட்-அப்! சாருலதா திரைப்பட இசை வெளியீடு - பகுதி 2 - சினிமா இணைப்புக்கள் சில
சாருலதா திரைப்பட இசை வெளியீடு வீடியோ பகுதி - 1
பகுதி 2 இங்கே
சாருலதா திரைப்படத்தின் புதிய படங்கள்
ஷாலினி அஜித்குமார் இறகுப்பந்து போட்டி புகைப்படங்கள்
சத்யராஜ் வெளியிட்ட மரணதண்டனைக்கு எதிரான ஆவணப்படத்தின் புகைப்படங்கள் சில
சாருலதா திரைப்பட குழுவினர் புகைப்படங்கள்
சாருலதா திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்வு புகைப்படங்கள்
இளைய தளபதி விஜய் , பிரபு கலந்து கொண்ட திறப்பு விழா முழுமையான படங்கள்
நடிகர் விஜய் - சட்டம் ஒரு இருட்டறை படப்பிடிப்புத் தளத்தில் புகைப்படங்கள்
சினேகா பிரசன்னா - Benz Sports Car Launch நிகழ்வில் புகைப்படங்கள்
பார்த்தீபன் , சோனியா அகர்வால் , நமீதா மற்றும் ஏனைய திரையுலகினர் கலந்துகொண்ட அகிலன் திரைப்பட இசை வெளியீடு நிகழ்வு படங்கள்
பெருமான் படத்தின் இயக்குனர் ராஜேஷ், ஒரு மூன்று நிமிடங்கள் கொடுங்கள் நான் கதை சொல்லிவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார். ஒப்புக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரொம்ப உன்னிப்பாக கதை கேட்டாராம். கேட்டபின் அவருக்கே உண்டான பாணியில் சூப்பர்ப், பென்டாஸ்டிக், எக்செலேன்ட் என்று பாராட்டிய ரஜினிகாந்த், என்னிடம் சொன்னது போலவே படத்தை நீங்கள் எடுத்தால் படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று கூறிப் பாராட்டியதோடு, இயக்குனருக்கு அழகிய சிலை ஒன்றையும் பரிசாக அளித்தாராம்.
பெருமான் என்றால் என்ன அர்த்தம் என்று ரஜினிகாந்த் கேட்க பெருமான் என்றால் எல்லோருக்கும் மேலானவர் என்று அர்த்தம் என்றும் சொன்னாராம் இயக்குனர் ராஜேஷ். இப்படியாக உருவான பெருமான் திரைப்படம் தமிழ், ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளில் படம் தயாராகிறதாம்.
சதா சுற்றித் திரியும் ஐந்து நண்பர்கள் சேர்ந்த இந்த கதை நண்பர்களுக்குள் 10 நாட்களில் நடக்கும் விறுவிறுப்பான கதையே பெருமான் திரைப்படம். இந்த 10 நாட்களில் கதாநாயகி, கதாநாயகன் நண்பர்கள் மூவர் வாழ்வில் 10 நாட்களில் நடக்கும் சுவாரஷ்யம் திரைக்கதையில் நன்றாக வந்திருக்கிறது என்கிறார் இயக்குனர். மேலும் கதாநாயகன், கதாநாயகி இயக்குனர், இசையமைப்பாளர் என்று இந்த படம் முழுக்க முழுக்க புதியவர்களின் கூட்டணி என்று சொல்லலாம்.
செண்டிமெண்ட், நகைச்சுவை, எதிர்பாராத திருப்பங்கள், மனதை மயக்கும் பாடல்கள் என்று எல்லாமே உண்டு. இயக்குன ராஜேஷ் நான்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். இந்த பாடல்களுக்கு 21 வயதேயான விக்ரம் சாரதி இசை அமைத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பான பாடலில் அடக்கமாம். இதற்கென சில அறிய முயற்சிகளைக் கையாணடதாக சொல்லும் இசை அமைப்பாளர் விக்ரம் சாரதி, மேலும் ஒரு பாடலுக்கு பாரம்பரிய இசைக்கருவிகளை வைத்து இசையமைக்க வேண்டும் என்று வயலின், தபேலா, கடம் இவைகளைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார் விக்ரம் சாரதி.
ரஜினிகாந்தின் ஆசியோடு பெருமான் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். எதிர்வரும் 24 ம திகதி திரைக்கு வரவிருக்கிறது என்கிறார் இயக்குனர் ராஜேஷ் கண்ணா.
மேலும் சினி செய்திகள்

.jpg)