Thursday, May 23rd

Last update01:12:35 AM

இப்படிக்கு தோழர் செங்கொடி - மரண தண்டனைக்கு எதிரான ஆவணப்படம் ஆகஸ்ட் 19 வெளியீடு

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று தமிழர்களுக்கான போராட்டத்தைத் தன்னுயிரைக் கொடுத்து

வேகப்படுத்திய செங்கொடியின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இப்படிக்கு தோழர் செங்கொடி மரண தண்டனைக்கு எதிரான ஆவணப்படமாக வெளிவருகிறது.

வருகின்ற ஆகஸ்ட் 19ம் தேதி கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு டான்போஸ்கோ அரங்கில் மாலை 5 மணிக்கு இப்படத்தின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. நடிகர் சத்யராஜ் ஆவணப்படத்தை வெளியிட பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் பெற்றுக் கொள்கிறார். வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம் திரையிடப்படுகிறது. அனுமதி இலவசம்.

படத்தின் இயக்குநர் வே. வெற்றிவேல் சந்திரசேகர் இளம் பத்திரிகையாளர். காலைக்கதிர், தினமலர், தினமணி, ஆகிய நாளிதழ்களிலும் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையிலும் பணிபுரிந்துள்ளார். தற்போது சில பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் எழுதிய நெடுந்தொடர்கள் முன்னணி தொலைக்காட்சிகளில்  ஒளிப்பரப்பாகி வருகின்றன. சங்க காலத் தமிழர்களுடைய வாழ்க்கைமுறையின் பின்னணியில், இன்றைய தமிழர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசிய ’பாலை’ திரைப்படத்தில் இணை இயக்குனராக வெற்றிவேல் பணிபுரிந்துள்ளார்.

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறந்த புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மு.நியாஸ் அகமது இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். நார்வே சர்வதேச விருது வழங்கும் விழாவில் சிறந்த சமூக இயக்குநர் விருது பெற்ற ‘பாலை’ படத்தின் படத்தொகுப்பாளர் ச.ரிச்சர்ட் படத்தொகுப்பு செய்துள்ளார். செங்கொடியை மீட்டுருவாக்கம் செய்யும் சித்தரிப்புக் காட்சிகள் நிறைந்த, சமகால அரசியல் பேசும்,நிறைய விவாதங்களை எழுப்பும் இந்த நூற்றாண்டின் முக்கிய நிகழ்வின் வரலாற்றுப் பதிவான இந்தப் படம் மூவர் விடுதலையை முன்னிறுத்தும் போராட்டங்களுக்கு காட்சி ஊடக ஆயுதமாக வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus