திரைச்செய்திகள்
Typography

யானைய தூக்குற தெம்பில்லாதவங்கள்லாம் ஏம்ப்பா தும்பிக்கையை தொட வர்றீங்க?

என்பது போல இருக்கிறது நடிகர் ஜெய்யின் நடவடிக்கை. இவரது படப்பிடிப்பு ஒழுங்கும், ஒழுக்கமும் உலகறிந்த விஷயம். சமயங்களில் சிம்புவுக்கே அண்ணனாக இருப்பரோ என்று யோசிக்கிற அளவுக்கு கதற விடுவார். அப்படியிருந்தும் அவரை புக் பண்ணி எப்படியோ படத்தை முடித்தார்கள் ‘பலூன்’ படக்குழுவினர். ஜெய்யால் படப்பிடிப்பு கேன்சல் செய்யப்பட்ட வகையிலும், ஷுட்டிங் எடுக்க தாமதப்படுத்திய வகையிலும் சுமார் ஒரு கோடியே முப்பது லட்சம் நாமம்! கண்ணீர் வழிய தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் நடிகர் சங்கத் தலைவர் விஷால் யாருக்கு சாதகமாக பேசுவாரோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்