திரைச்செய்திகள்
Typography

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்று வென்றதோடு சரி. அதற்கப்புறம் அந்தப்பக்கமே வருவதில்லை கவுதம் மேனனும், ஆர்யாவும். இவ்விருவரையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக வேறொருவரை நியமிக்க வேண்டும் என்கிற கருத்தை கடும் எரிச்சலுடன் வெளிப்படுத்தி வருகிறார்கள் சங்கத்தில்.

இதெல்லாம் அரசல் புரசலாக காதில் விழுந்தாலும், ‘விடுங்கப்பா... சொல்றவங்கள் சொல்லுவாங்க. நமக்கு வேலையிருக்குல்ல?’ என்கிறார்களாம் இருவரும். சண்டை போட ஏதாவது காரணம் கிடைக்காதா என்று அலைந்து கொண்டிருக்கும் அதிருப்தியாளர்களின் அடுத்த குடைச்சல் இதுவாகதான் இருக்கப் போகிறது. வானம் அனல் வீசலேன்னா, வற்றல் வடாம் காயுறது எப்படி? கலக்குங்க ராசாக்களா?

Most Read