திரைச்செய்திகள்
Typography

‘மெர்சல்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், ‘நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? வரட்டுமே...’ என்று கூறியிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆளப்போறன் தமிழன் பாடல் குறித்தான கருத்துதான் அது.

பொதுவாகவே தான் உண்டு. தன் வேலை உண்டு என்று இருப்பவர் அவர். அப்படிப்பட்ட அவரே இப்படி போல்டாக பேசிவிட்டாரே? என்று ஜனங்கள் சந்தோஷப்பட்டு சில மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு தன் முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார் இசைப்புயல். ‘தேவைப்பட்டால் அவரை நேரில் சந்தித்து பொன்னாடை கூட போர்த்தி வாழ்த்துவேன்’ என்று கூறினாராம் தனது நட்பு வட்டாரங்களில். அப்படியொன்று நடந்தால், அதுவே ரஜினி கட்சிக்கு வழங்கப்பட்ட ஆஸ்கர்!

Most Read