திரைச்செய்திகள்
Typography

‘வேலைக்காரன்’ படம் அழுத்தமான ஒரு கருத்தை முன் வைத்த படம்தான். இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால் அதை எடுத்து முடிப்பதற்குள் ஏகப்பட்ட செலவை இழுத்துவிட்டு விட்டாராம் டைரக்டர் மோகன் ராஜா.

போட்ட பட்ஜெட்டுக்கும், படம் முடியும்போது ஆன செலவுக்கும் சம்பந்தமேயில்லை என்கிறார்கள். இது வெளியுலகத்திற்கு தெரியாவிட்டாலும், மோகன் ராஜாவின் மிதமிஞ்சிய வெட்டிச் செலவை விழுந்து விழுந்து விமர்சிக்கிறது கோடம்பாக்கம். இனி அவருக்கு ரஜினியே கால்ஷீட் கொடுத்தாலும் தயாரிப்பாளர் கிடைப்பது சந்தேகம்தான் என்கிற அளவுக்கு போகிறது குற்றச்சாட்டு. அவருக்கென்ன... அப்பாவே இன்வெஸ்ட் பண்ணுவார். வீட்டிலேயே ஹீரோ இருக்கிறார். கையடக்கமாக படம் எடுக்கக்கூடும். துளசி செடியில் வாழை இலை முளைக்கறதெல்லாம் வேற தோட்டத்தில்தான். சொந்த இடத்தில் இல்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்