திரைச்செய்திகள்
Typography

ஒரு வழியாக தப்பித்தது தானா சேர்ந்த கூட்டம். பைனான்சியர் அன்புச் செழியனுக்கு தர வேண்டிய சுமார் 28 கோடியை ஒரே பேமென்ட்டாக அவர் கேட்பதால், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு யுக்தி செய்தாராம்.

பிரபல வி.ஐ.பி ஒருவரை விட்டு பேச வைத்தாராம். எப்படியோ பேச்சு வார்த்தைக்குப்பின் அன்பு, ‘முதலில் 15 கோடியை செட்டில் பண்ணுங்க. மிச்சத்தை அடுத்தடுத்த படங்களில் பார்க்கலாம்’ என்று இறங்கி வந்ததுதான் வியப்பு. அப்படியிருந்தும் அறுந்த நூடுல்ஸ் போல தொங்கியது விவகாரம். ஏன்? பஞ்சாயத்திற்கு சூர்யாவையும் நேரில் வரச்சொன்னார்களாம். போனால் என்னாகும் என்பது அவருக்கு தெரியாதா? ஆள் நழுவிவிட்டார். அப்புறம் எப்படியோ, யார் யாரையோ பேச வைத்து கிளியரன்ஸ் சர்டிபிகேட் வாங்கிவிட்டார் ஞானவேல் ராஜா. உத்தம வில்லனுக்கு உதவப் போய் மாட்டிகிட்டேன். இனி ஒரு முறை தவறு செய்ய மாட்டேன் என்று கலங்கினார். படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு ரிலீஸ்.

Most Read