திரைச்செய்திகள்
Typography

ரஜினி தனது தனிக்கட்சி அறிவிப்பை இப்போது சொல்ல மாட்டார் என்றுதான் மீடியாக்கள் நினைத்திருந்தன. முதலில் ரஜினி பேரவை. அதற்கப்புறம் அதுவே கட்சியாக மாற்றப்படும்.

அதற்கு சில வருடங்கள் பிடிக்கலாம் என்றுதான் புலனாய்வு இதழ்கள் எழுதி வந்தன. ஆனால் எல்லாம் உல்டாவாகி விட்டது. இதற்கு காரணம் என்ன? தன் மனதில் என்ன இருக்கிறது என்பதை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லையாம் ரஜினி. மண்டபத்தில் இருக்கிற ஊழியர்களிடம் பேசி பேசிதான் ரஜினி பேரவை செய்தியை கறந்தன மீடியாக்கள். இப்போது சொல்லி வைத்தாற் போல, இரு தரப்புக்கும் விளக்கெண்ணை எபெக்ட்! ‘தலைவர் நம்மகிட்ட கூட சொல்லாம விட்டுட்டாரே’ என்று அதிர்ந்து போயிருக்கிறது மண்டப வட்டாரம்.

Most Read