திரைச்செய்திகள்
Typography

நயன்தாராவை கவலைப்பட வைப்பதே மோகன் ராஜாவின் வேலையாகிவிட்டது. ‘தனி ஒருவன்’ படத்திற்கு பின் இனி மோகன் ராஜா படத்தில் நடிப்பதில்லை என்கிற வலுவான முடிவுக்கே வந்திருந்தார் அவர். படத்தில் இவரை அப்படி காட்டியிருந்தார்கள்.

எப்படியோ? சிவகார்த்திகேயனின் வற்புறுத்தலுக்கு இணங்கி ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்தவருக்கு மீண்டும் பழைய குருடி கதவை திறடி கதையாகிவிட்டது. நயன்தாரா காட்சிகளில் சுமார் அறுபது சதவீதம் வெட்டப்பட்டுவிட்டதாம். படத்தை தியேட்டரில் பார்த்தவர் செம ஹாட் ஆகிவிட்டாராம். சுட சுட வாட்ஸ் ஆப்பில் ஒரு பொரியல் பார்சலை அனுப்பிவிட்டு ஓய்ந்துவிட்டார். இனிமேல் மோகன்ராஜாவுக்கு இவரது கல்யாண இன்விடேஷன் கூட போய் சேருமா தெரியவில்லை.

Most Read