திரைச்செய்திகள்
Typography

சிவகார்த்திகேயனும் சந்தானமும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டால் கூட, புன்னகை என்ன விலை என்பார்கள்.

ஒரே காம்பவுண்டிலிருந்து சினிமாவுக்குள் வந்து கொடி நாட்டிய இவ்விருவரையும் இணைத்து வைக்க நடந்த முயற்சி எப்பவோ காலாவதியாகிவிட்டது.

‘நல்ல கதை இருந்தா நாங்க சேர்ந்து நடிக்கறதுல ஆட்சேபணை இல்ல’ என்று இருவரும் பிரஸ்சிடம் பதில் சொல்ல சமாளித்தாலும், அது நடக்காது என்பதுதான் நிஜம். இந்த நிலையில் டிசம்பர் 22 ந் தேதி தனது ‘வேலைக்காரன்’ ரிலீஸ் என்று அறிவித்திருக்கிறார் சிவா.

அதே நாளில் சந்தானத்தின் ‘சக்கப் போடு போடு ராஜா’ படமும் ரிலீஸ் என்று அறிவித்திருக்கிறார் சந்தானம். யார் மூக்குக்கு பிளாஸ்த்ரி போடுவது என்று பரபரப்போடு காத்திருக்கிறது ரசிகர் கூட்டம். பானை எதுவா இருந்தால் என்ன? கொழுக்கட்டை வெந்திருக்கணும். அம்புட்டுதேன்...

Most Read