திரைச்செய்திகள்
Typography

பரபரவென மார்க்கெட்டை ஸ்பீட் பண்ணுகிற நடிகைகளில் நிக்கி கல்ராணிக்கு ஒரு ஸ்பெஷல் இடம் உண்டு.

டைரக்டர்தான் முதலாளி... இந்த முதலாளிக்கே முதலாளி தயாரிப்பாளர்தான் என்கிற எண்ணத்தையும், அதற்குண்டான மரியாதையையும் கடை பிடிப்பவரும் கூட. இவ்வளவு நல்ல பெண்ணுக்கு வந்த சோதனைதான் ஹரஹரமகாதேவகி.

அதில் இவர் பேசுகிற ஆபாச வசனங்களுக்கு கலெக்ஷன் ப்ளஸ் கைதட்டல்கள் கிடைத்தாலும், நிஜத்தில் படு பயங்கர அப்செட் ஆகிவிட்டார்.

அதற்கப்புறம் வந்த சுமார் அரை டஜன் பட வாய்ப்புகள் இதே டைப்பில் இருக்க... ஆளை விடுங்க அண்ணாச்சிகளா என்று கதவை இறுக்க மூடிவிட்டார். மகாதேவகி இமேஜிலேர்ந்து என்னை வெளியே கொண்டு வர மாதிரி ஒரு கதை சொல்லுங்க என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

எதுக்கும் அறம் கோபி நயினாரை அனுப்பி வைக்கலாமா?

Most Read