திரைச்செய்திகள்
Typography

இந்த வாரம் முழுக்க பைனான்சியர் அன்புச்செழியனின் பேச்சுதான் கோடம்பாக்கத்தில். இதில் அவரை போற்றியவர்களும் உண்டு. தூற்றியவர்களும் உண்டு. ஒவ்வொரு முறையும் கந்து வட்டி பற்றி கவலைப்படும் சினிமாக்கார்கள் இந்த முறை ஒரு மரணத்திற்குப் பின் இன்னும் அதிகமாக அதிர்ச்சியானதில் வியப்பில்லை.

இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார், தன் தற்கொலை மூலம் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்ற முறையில் விஷால் அன்புச்செழியனுக்கு எதிராக அறிக்கை விட்டாலும், அந்த அறிக்கையில் அன்புச்செழியன் என்ற பெயரே இல்லை என்பது பலருக்கும் அதிர்ச்சி. காரணத்தை துழாவினால் இதே அன்புச்செழியனுக்கு விஷால் தர வேண்டிய கடனே பல கோடிகள் இருக்கிறதாம். இந்த நிலையில்தான் விஷாலை உள்ளேயிருக்கிற தயாரிப்பாளர்களே நெருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ‘உங்கள் வீராவேசம், வேஷமற்றதாக இருந்தால் ஒன்று செய்யுங்க. அன்புச்செழியனை தயாரிப்பாளர் சங்கத்திலே இருந்து நீக்குங்க’ என்கிறார்களாம். விஷால் பேச வேண்டிய நேரமல்ல... முடிவெடுக்க வேண்டிய நேரம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்