திரைச்செய்திகள்
Typography

ஆன்ட்ரியா வெறும் நடிகை மட்டுமல்ல. சிறந்த பாடகி.

அதைவிட சிறப்பு... அவரே ஒரு மியூசிக் டைரக்டர்தான். ஆனால் அவரை அரங்கேற்றம் செய்கிற அளவுக்கு ஒரு தயாரிப்பாளருக்கும் மனசில்லை என்பது தனி ஷாக்.

இந்த நிலையில் தமிழ்சினிமாவிலிருக்கும் இளம் இசையமைப்பாளர்கள் எல்லாருடனும் நெருக்கமாகவும் அன்பாகவும் பழகி வரும் இவர், அவர்கள் எல்லாரையும் ஒரே மேடையில் ஏற்றி ஒரு ஷோ நடத்தவும் திட்டமிட்டிருக்கிறாராம். அதாவது யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், ஜி.வி.பிரகாஷ் மாதிரி இசையமைப்பாளர்கள் ஒரே மேடையில் ஏறினால் அது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்? இதைதான் செய்யப் போகிறார் ஆன்ட்ரியா.

இப்படியொரு விஷயம் நடக்கப் போவதை அறிந்த பெரிய பெரிய நிறுவனங்கள், ஸ்பான்சருக்கு ஆலாய் பறக்கிறார்களாம். ஆன்ட்ரியாவின் அன்பு எந்த கம்பெனிக்கு கொடுத்து வச்சுருக்கோ?

Most Read