திரைச்செய்திகள்
Typography

எழுதிய ஸ்கிரிப்டுக்கு மேல எக்ஸ்ட்ரா ஒரு பிட் கூட இருக்கக் கூடாது என்று திட்டம் போட்டு படமெடுத்த காலமெல்லாம் போயே போச்சு.

பிலிமில் படம் எடுக்கிற காலத்தில் இருந்த திட்டமிடல், டிஜிட்டல் வந்ததும் நாசமா போச்சே என்று கவலைப்படுகிற அளவுக்கு போய்விட்டது நிலைமை.

‘வேலைக்காரன்’ படம் இடைவேளைக்கு பின் நாலு மணி நேர புட்டேஜ் இருப்பது ஒரு பக்கம்.

தற்போது விக்ரம் கவுதம் மேனன் இணையும் ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கும் அப்படியொரு இம்சையாம்.

நறுக்கி வெட்டி சேர்த்து இழுத்துப் பார்த்தாலும், கதை ஒரு ஷேப்புக்கு வராததால் கடும் அதிருப்திக்கு ஆளான கவுதம், படத்தை இரண்டு பகுதிகளாக வெளியிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

இது அவரது சொந்தப்படம் என்பதால், இரட்டிப்பு லாபத்தை அவர் கணக்குப் போட்டிருக்கலாம். ஆனால் படத்தின் ஹீரோ விக்ரமும் இரட்டிப்பு சம்பளத்தை கேட்டு மிரட்டுவதால், கவுதம் இப்போது கண்டமேனிக்கு அப்செட்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்