திரைச்செய்திகள்
Typography

இயக்குனர் அட்லீக்கு இப்போது புது குடைச்சல் ஒன்று.

அவரது சமீபத்திய படமான மெர்சல், எந்த படத்தின் தழுவல் என்பது குறித்து பலரும் பலவித விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரான கதிரேசன் நேரடியாக ஸ்பாட்டில் இறங்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டார்.

ரஜினி நடித்த மூன்று முகம் படத்தின் ரீமேக் ரைட்ஸ் இவரிடம்தான் இருக்கிறது.

மெர்சல் படமே மூன்று முகம் படத்தின் உருவல்தான் என்கிறார் அவர்.

“இனிமேல் இந்த படத்தை நான் எப்படி ரீமேக் செய்ய முடியும்? அதனால் அட்லீ மெர்சலுக்காக வாங்கிய சம்பளத்தில் முப்பது சதவீதம் எனக்கு வந்தாக வேண்டும்” என்கிறாராம். பஞ்சாயத்து ஸ்டார்ட்!

Most Read