திரைச்செய்திகள்
Typography

உதவி இயக்குனர்களுக்கு மட்டும்தான் உள் பாக்கெட்டும் காலியாக இருக்கும்.

அன்றாட செலவுக்கே அல்லாடுகிற அவர்களின் கஷ்டம் மற்றவர்களுக்கு தெரிகிறதோ, இல்லையோ? அதே துறையிலிருக்கும் மிஷ்கின், வெற்றிமாறன்களுக்கு தெரியாமல் போனதுதான் அதிர்ச்சி.

உதவி இயக்குனர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருக்கும் அவர்கள், அனுமதி கட்டணமாக நிர்ணயித்தது எவ்வளவு தெரியுமா? பத்தாயிரம்...! மனம் நொந்த பலரும் மிஷ்கின், வெற்றிமாறன், ராம் மூவருக்கும் போன் போட்டால், அது நானில்லை அவர்... என்று மாறி மாறி கை காட்டுகிறார்களாம்.

படத்துலதான் புரட்சியெல்லாம். நிஜத்தில் கலெக்ஷன் கலெக்ஷன்!

Most Read