திரைச்செய்திகள்
Typography

கரணம் தப்பினால் கண்டமாகியிருக்கும் மெர்சல்! நல்லவேளையாக இந்தப்படத்திற்கு இலவச பப்ளிசிடி கொடுத்து பெரும் கலெக்ஷன் ஈட்ட உதவியது தமிழக பா.ஜ.க.

இப்படி சேம் சைட் கோல் விழுந்திருச்சே என்று அவர்கள் புண்பட்டதை விடுங்கள்.

தனியாக தன்னந்தனியாக ஒரு முக்கிய விஷயத்தை நினைத்து புண் பட்டுக் கொண்டிருக்கிறாராம் மெர்சல் தயாரிப்பாளர் முரளி.

ஏன்? பிரான்ஸ் நாட்டில் பல லட்சம் செலவு செய்து எடுக்கப்பட்ட ஒரு கார் சேசிங் காட்சி, சர்வ சாதாரணமாக நறுக்கி எறியப்பட்டுவிட்டதாம்.

இந்த சேசிங்கை படம் பிடிக்க ஏற்பட்ட செலவு, அங்கு பர்மிஷன் வாங்குவதற்கு செய்யப்பட்ட மெனக்கடல், அதைவிட விஜய் அந்த சேசிங்குக்காக உழைத்த உழைப்பு என எல்லாம் அவுட் என்ற கவலைதான் அது.

இனி அட்லீ என்றால் இன்டஸ்ட்ரியே மிரள்கிற அளவுக்கு ஒவ்வொரு நாளும் பீதி சம்பவங்கள் கிளம்புகிறது.

எல்லாம் சேர்ந்து வந்து தன் முன்  நின்றால், அட்லீ சொந்தப்படம் எடுக்க வேண்டியதுதான் என்றும் முணுமுணுக்கிறார்கள்.

Most Read