திரைச்செய்திகள்
Typography

‘ஐயா’ படத்தில் நயன்தாராவை அறிமுகப்படுத்தினார் ஹரி.

அதற்கப்புறம் தாமிரபரணி படத்தில் நடிக்க அவரை அழைத்தபோது அவரால் வர முடியாத சுச்சுவேஷன்.

சற்றே எரிச்சலான ஹரி, ‘உன்னை மாதிரியே ஒரு பொண்ணை கொண்டு வர்றேன் பார்...’ என்று சவால் விட்டு தேடிக் கொண்டு வந்தவர்தான் பானு.

நயன்தாராவை ஜெராக்ஸ் எடுத்ததை போலவே இருப்பார் அவர்.

சுச்சுவேஷன் மீண்டும் ரிப்பீட். சாமி 2 படத்தில் நடிப்பதாக முதலில் ஒப்புக்கொண்ட த்ரிஷா, படத்தில் கீர்த்தி சுரேஷும் இருக்கிறார் என்றதும், ‘ஐ ஆம் ஸாரி’ என்று விலகிவிட்டார்.

த்ரிஷாவின் முடிவால் ஹரிக்கு கோபம். அதே முக ஜாடையில் நடிகைகளை தேடிக் கொண்டிருக்கிறாராம். அப்படியே கிடைச்சா இந்த நடிகைக்கு  ‘ட்ரிக்’ஷான்னு பேரு வைப்பாரோ?

Most Read