திரைச்செய்திகள்
Typography

சினிமா கொடுக்கிற சொகுசு சுகத்தை அறிந்தவர்கள், அவ்வளவு சுலபமாக அதைவிட்டு போக மாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் அஞ்சலியின் சித்திதான்.

ஒரு காலத்தில் அஞ்சலியின் ஒரிஜனல் அம்மா இவர்தான் என்று உலகமே நம்புகிற அளவுக்கு ஒன்றாக இருந்தவர்கள், இப்போது பகை வீட்டில்! சமாதானங்கள் எடுபடாத நிலையில், தன் ஒரிஜனல் பெண்ணை நடிக்க வைக்க கிளம்பிவிட்டார் சித்தி.

இந்த அறிமுக முயற்சிக்கு நல்ல ரெஸ்பான்ஸ். தமிழிலேயே இரண்டு நிறுவனங்கள், வாம்மா வாம்மா என்று அழைத்திருக்கிறதாம். அஞ்சலியை அமுக்கிவிட்டு, இந்த தங்கச்சி வளர்ந்தால் அது அஞ்சலியை பிடிக்காதவர்களின் சூழ்ச்சியாகவும் இருக்கக் கூடும்!

Most Read