திரைச்செய்திகள்
Typography

சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் கேரள நடிகர் திலீப்பின் படம் ஒன்று இப்போது கேரளாவில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

முதலில் இந்தப்படத்திற்கு ‘வெல்கம் டூ புழல்’ என்றுதான் தலைப்பு வைத்தார்களாம். எந்த நேரத்தில் வைத்தார்களோ, சிறைக்குப் போய் விட்டார் அவர். அதனால் ‘ராம்லீலா’ என்று தலைப்பை மாற்றி படத்தை முடித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

ரெஸ்பான்ஸ் எப்படி? படுபயங்கர வரவேற்பு. சென்னையில் சில தியேட்டர்களில் ரிலீஸ் ஆன இப்படத்தை காண கூட்டம் கூட்டமாக கூடினர் சேட்டன்கள். கேரளாவில் அண்மையில் வெளியான புலிமுருகன் என்ற படம் 100 கோடி வசூலித்தது. இந்தப்படம் அதையும் தாண்டும் என்கிறார்கள். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்திருக்கும் திலீப்புக்கு இதுதான் ரிலீஸ் பரிசு

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்